1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 30 ஜூலை 2014 (13:48 IST)

கும்பகோணம் தீ விபத்து வழக்கு: பள்ளி உரிமையாளர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள், மீதம் உள்ளவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

கும்பகோணம் தீ விபத்து வழக்கில், பள்ளி உரிமையாளர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பள்ளியின் தாளாளர் சரஸ்வதி உள்ளிட்ட 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
94 குழந்தைகளை காவு வாங்கிய கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்து தொடர்பான வழக்கில் தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பள்ளி உரிமையாளர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பள்ளியின் தாளாளர் சரஸ்வதி உள்ளிட்ட 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.
 
குற்றம்சாற்றப்பட்ட 24 பேரில் 3 பேரை ஏற்கனவே வழக்கில் தொடர்பில்லாதவர்கள் என நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது. மீதம் உள்ள 21 பேர் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட்டிருந்தது.
 
நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த வழக்கில், மொத்தம் உள்ள 21 பேரில் 11 பேரை நீதிபதி முகமது அலி இன்று காலை விடுதலை செய்தார். இது பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கில் மீதம் உள்ள பத்து பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து இவர்களுக்கான தண்டனை இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
 
பள்ளியின் உரிமையாளர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தாளாளர் சரஸ்வதி உள்ளிட்ட 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தஞ்சை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.