பாஜகவுடன் வேல் யாத்திரை போக ரெடியாகும் அழகிரி ?

Sugapriya Prakash| Last Modified திங்கள், 23 நவம்பர் 2020 (11:02 IST)
வேல் இல்லாமல், முருகன் சிலையுடன் பாஜகவினர் சென்றால் நாங்களும் வருவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் கடந்த 6 ஆம் தேதி முதல் வேல் யாத்திரையை நடத்தி வருகிறார் என்பதும் இந்த வேல் யாத்திரை அடுத்த மாதம் வரை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வேல் யாத்திரையை நடத்திவரும் முருகன் அவ்வப்போது கைது செய்யப்பட்ட வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில், வேல் இல்லாமல், முருகன் சிலையுடன் பாஜகவினர் சென்றால் நாங்களும் வருவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறியதாவது கடவுள் பக்தி உண்மை என்றால் வேல் இல்லாமல் முருகன் சிலையுடன் பாஜகவினர் செல்ல வேண்டும், அப்படி சென்றால் நாங்களும் வருவோம் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :