Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டாக்டர் கிருஷ்ணசாமி மதவெறி பிடித்த நோயாளி: விளாசும் பாலபாரதி!

டாக்டர் கிருஷ்ணசாமி மதவெறி பிடித்த நோயாளி: விளாசும் பாலபாரதி!

செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (15:06 IST)

Widgets Magazine

மாணவி அனிதா தற்கொலை விவகாரத்தில் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அதிரடி பதிலடிகளை கொடுத்து வருகிறார்.


 
 
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு அவரது தற்கொலைக்கு காரணமில்லை. வேறு காரணங்களுக்காக அனிதா தற்கொலை செய்திருக்கலாம். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார்.
 
இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தனது சமூக வலைதள பக்கத்தில் கிருஷ்ணசாமி குறித்து பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் கிருஷ்ணசாமி தனது மகள் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்ததால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து புறவாசல் வழியாக மருத்துவப்படிப்புக்கான சீட்டை பெற்றதை அம்பலப்படுத்தினார்.
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி நான் பாலபாரதியை சட்டமன்றத்தில் பார்த்ததே இல்லை. மேலும் அந்த பொம்பளையை நான் பார்த்ததே இல்லை என தரக்குறைவாக பேசியிருந்தார் அவர்.
 
இதற்கு பதிலடி கொடுத்திருந்த பாலபாரதி, கிருஷ்ணசாமியை இதுநாள் வரை டாக்டர் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் டாக்டர் அல்ல நோயாளி. அதுவும் மதவெறி பிடித்த நோயாளி என்பதை தெரிந்து கொண்டேன் என்றார்.
 
மேலும் தனது முகநூல் பக்கத்தில், உன்னை பெற்றது யார்? உன் துணையாக வந்தது யார்? நீ பெற்றது யாரை? யாருக்காக ஷீட் கேட்டாய்? யாரிடம் கேட்டாய்? எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் டாக்டர்கிருஷ்ணசாமி "பொம்பளை! என பாலபாரதி கூறியிருந்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கூட்டத்தை நிராகரித்த எம்.எல்.ஏக்கள் - அதிர்ச்சியில் முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ...

news

அதிர்ச்சி தகவல்: 40 ஆண்களால் பலமுறை கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி!

ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் 14 வயது சிறுமி ஒருவர் 40 ஆண்களால் பலமுறை பாலியல் ...

news

அரசுக்கு எதிராக போராட்டம் : களத்தில் குதித்த தினகரன்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வருகிற 9ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக துணைப் ...

news

இது அனிதாக்களுக்கான காலம் அல்ல! நிர்மலா சீதாராமன்கள் காலம்

நிச்சயம் இது அனிதாக்களுக்கான காலம் அல்ல! இது நிர்மலா சீதாராமன்கள் காலம் என்பதை வரலாறு ...

Widgets Magazine Widgets Magazine