வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 24 மே 2018 (11:16 IST)

ஸ்டெர்லைட்டை மூடு - கோவன் வெளியிட்ட வீடியோ

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவன் வெளியிட்ட பாடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியாகிய நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக துப்பாக்கி சூடு நடந்தது. 
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகிய நிலையில் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவரும் இறந்ததால் கடந்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவன் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்ற தலைப்பில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.