1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2015 (12:49 IST)

பாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

பாடகர் கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


 

 
மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த பாடகர் கோவனுக்கு எதிராக,  வேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரச் மனு தாக்கல் செய்தது.
 
இந்த மனு, நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, யு.யு.லலித் ஆகியோர் அட்கிய அமர்விற்கு  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க எந்த முகாந்தரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்ததாக கூறினர்.
 
முன்னதாக, கோவனை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதி சி.டி.செல்வம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
 
இதைத்  தொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.