வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2016 (15:13 IST)

சங்கர் படுகொலையில் கவுசல்யாவின் தாயார் சரண்

உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை தொடர்பான வழக்கில் கவுசல்யாவின் தாயார் அன்னலெட்சுமி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
 

 
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்கர் கடந்த 13ஆம் தேதி உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
 
இந்த படுகொலை தொடர்பாக கொலை நடந்த மறுநாளே 14ஆம் தேதி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
அதற்கு மறுநாள் இந்த படுகொலையில் ஈடுபட்ட பழனியை சேர்ந்த மணிகண்டன், மதன், செல்வகுமார், ஜெகதீசன் ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
 
இந்நிலையில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாயார் அன்னலெட்சுமி தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரி உத்தரவிட்டார்.