டிடிவி தினகரன் அணியில் இருந்து அதிமுகவுக்கு தாவிய முன்னாள் அமைச்சர்

Last Modified புதன், 6 மார்ச் 2019 (12:08 IST)
தேர்தல் நெருங்கும் வேளையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு அரசியல்வாதிகள் தாவுவது இந்திய அளவில் வழக்கமான ஒன்றே. அந்த வகையில் தமிழகத்திலும் சில அரசியல்வாதிகள் சமீபத்தில் கட்சி மாறினர்
இந்த நிலையில் டிடிவி தினகரன் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் சற்றுமுன் அதிமுகவில் இணைந்தார். இதனால் டிடிவி தினகரனின் அணி பலவீனமாகி வருவதாக கூறப்படுகிறது

சமீபத்தில் டிடிவி தினகரன் கட்சியின் முக்கிய பிரமுகரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்த நிலையில் தற்போது இன்னொரு பிரபலம் அதிமுகவுக்கு சென்றுள்ளார். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் ஒருசிலரும் டிடிவி அணியில் இருந்து தாவவிருப்பதாகவும் தேர்தலுக்குள் டிடிவி தினகரனின் கூடாரம் காலியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :