கிறிஸ்தவ ஆலயத்தில் பணம் திருடிய கேரள பட்டதாரி பெண்

Murugan| Last Modified செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (17:44 IST)
சென்னையில் கிறிஸ்துவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்வது போல் நடித்து பணம் திருடிய கேரள பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டார்.

ஆவடி சீனிவாசா நகரை சேர்ந்தவர் கெனத் ரஞ்சிதாமேரி. இவர் செப்.27 ஆம் தேதி காலை, ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகே இருந்த அமர்ந்திருந்த பெண் ஒருவர் கெனத் ரஞ்சிதாமேரியின் பையில் இருந்த பர்சை நைசாக திருடினார்.
 
இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அந்தப் பெண்ணை கையும் களவுமாக பிடித்து ஆவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
 
போலீசார் நடத்திய விசாரணையில் ‘திருடியதாக பிடிபட்ட அந்த பெண் கேரள மாநிலம் மனக்காடு சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்த சாந்தி (53) என்பதும் எம்.எஸ்.சி பட்டதாரியான இவர் சென்னை பூந்தமல்லி அருகே தனது தோழி வீட்டில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. மேலும், இவர் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது போல் நடித்து அருகில் இருப்பவர்களிடம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடுவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சாந்தியை போலீசார் கைது செய்து, புழல் ஜெயிலில் அடைத்தனர். 
 
கைதான சாந்தி மீது ஏற்கனவே சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :