கொடநாடு காவலாளி கொலை ; சயனை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி மறுப்பு


Murugan| Last Modified வியாழன், 4 மே 2017 (12:20 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய சயனை கேரள போலீசார் விசாரிக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

 

 
கொடநாடு எஸ்டேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஓம்பகதூர், கூலிப்படையால் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். மேலும், ஜெ.வின் கைக்கடிகாரங்கள், பரிசு பொருட்கள், வைர நகைகள், ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் ஆகியவை கொள்ளை போனதாக கூறப்பட்டது. 
 
இந்நிலையில், இந்த கொலையின் மூளையாக செயல்பட்ட கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவருக்கு உதவியாக இருந்த சயன் என்பவரும் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த விபத்தில் சயனின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் இறந்து விட்டனர். 
 
தற்போது சயனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் தமிழக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 
 
சயன் கேரளாவை சேர்ந்தவர். அதேபோல், கேரளாவில்தான் கார் விபத்து ஏற்பட்டது. எனவே அவரிடம் விசாரணை செய்ய, கேரள போலீசார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்களிடம்  முறையான அனுமதி இல்லாததால், மருத்துவமனை நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி தர மறுத்துவிட்டது.


இதில் மேலும் படிக்கவும் :