Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தாத்தாவின் வெறிக்கு பலியான பேத்தி: ஆசையையும் தீர்த்து கொலையும் செய்த கொடூரம்!

தாத்தாவின் வெறிக்கு பலியான பேத்தி: ஆசையையும் தீர்த்து கொலையும் செய்த கொடூரம்!


Caston| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (18:00 IST)
கேரளா மாநிலம் கொல்லத்தில் வயதான முதியவர் ஒருவர் காம வெறியால் தனது பேத்தியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர செயலை செய்த அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

 
 
கொல்லத்தில் உள்ள குந்த்ரா என்ற கிராமத்தில் வயதான முதியவர் காம வெறியால் தனது பேத்தியையே பலாத்காரம் செய்யும் நிலைக்கு சென்றுள்ளார். தனது வெறியை பேத்தியிடம் தீர்த்துக்கொண்ட அந்த வயதானவர் சிறுமியை தற்கொலை செய்து கொள்ள தூண்டியுள்ளார்.
 
சிறுமியை மிரட்டி பின்னர் அவரே சிறுமியை கொன்று தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. இதனை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த கேரள போலீஸார் தலைமறைவாக இருந்த அந்த முதியவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :