1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (12:29 IST)

ஆத்தி தண்ணி வரலையே – மீண்டும் கூடும் காவிரி மேலாண்மை வாரியம்

நடந்து முடிந்த காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் இன்னமும் கர்நாடகா தண்ணீர் திறந்துவிடவில்லை.

ஜூன் மாதத்திற்கு 9 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டிய நிலையில் வெறும் 1 டி.எம்.சி தண்ணீர்தான் திறந்து விட்டிருக்கிறது கர்நாடகா. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் குடிநீர் பற்றாக்குறையை மட்டுமே தீர்க்க உதவும். அதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என தமிழக அரசு சொல்லிவிட்டது.

இந்நிலையில் மீண்டும் வரும் 25ம் தேதி காவேரி மேலாண்மை வாரிய கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த முறையாவது அடித்து பேசி தண்ணீர் கிடைக்க வழி செய்வார்களா என விவசாயிகள் வேதனையோடு காத்திருக்கின்றனர்.