Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமிலமாக மாறும் கதிராமங்கலம் நிலத்தடி நீர்!

அமிலமாக மாறும் கதிராமங்கலம் நிலத்தடி நீர்!

Last Modified: புதன், 12 ஜூலை 2017 (09:52 IST)

Widgets Magazine

கதிராமங்கலம் பகுதி நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு அந்த பகுதி நீர் அமிலமாக மாறி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.


 
 
ஓஎன்ஜிசி எண்ணை நிறுவனத்துக்கு எதிராக கதிராமங்கலத்தில் பொதுமக்கள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் 12 இடங்களில் எண்ணை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக எண்ணை குழாய்களை மாற்றி வருகிறது ஓஎன்ஜிசி நிறுவனம். இதனால் எண்ணை கசிவு ஏற்பட்டு அந்த பகுதியின் குடிநீர் பாதிக்கப்பட்டு குடிநீரின் நிறம் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என அந்த பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கதிராமங்கலம் பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சீமான் அந்த பகுதி நிலத்தடி நீர் அமிலமாக மாறி வருவதாக கூறியுள்ளார். கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி தோண்டி உள்ள ஆழ்குழாய் கிணறுகளால் அந்த பகுதியின் நிலத்தடி நீராதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது. அப்பகுதி தண்ணீர் அமிலமாக மாறி வருகிறது.
 
அந்த தண்ணீரை ஒரு ஆய்வகத்தில் பரிசோதனை செய்துள்ளோம். இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து எண்ணெய் எடுக்கும் திட்டப்பணியை தடுத்து நிறுத்துவோம் என்றார் சீமான்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

திமுக தாரை வார்த்த கச்சத்தீவை மீட்போம்: சட்டசபையில் அமைச்சர் சூளுரை

கடந்த 1974ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது இந்தியாவுக்கு சொந்தமான ...

news

வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த எஸ்பிஐ

கடந்த சில மாதங்களாகவே எஸ்பிஐ வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கட்டணங்களை அதிகரித்து ...

news

வெதர்மேன் கூறியது பலித்தது! சென்னையில் விடிய விடிய மழை

சென்னையில் நேற்று 1000% மழை பெய்யும் என உறுதியாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் ...

news

ஆணுறுப்புக்கு மேக்கப்: இதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்

பொதுவாக ஆண்களுக்கு மேக்கப் மீது அதிக பிரியம் இருக்காது. பெண்கள் தான் மணிக்கணக்கில் ...

Widgets Magazine Widgets Magazine