வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 27 ஜூன் 2016 (18:33 IST)

அடுத்த ஓ.பி.எஸ் கனவு காணும் தம்பிதுரை : ஜெயலலிதாவுக்கு தலைவலியா?

அடுத்த ஒ.பி.எஸ் கனவு காணும் கரூர் தம்பித்துரை முதல்வர் ஜெ.வுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளார். அவரின்  ஆதரவாளர்கள் யார் யார்? உளவுத்துறை ரிப்போர்ட் ரெடி.


 

 
தமிழகத்தில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒரு புறம் சொத்து குவிப்பு வழக்கில் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மேலும் தனது கட்சிக்குள் ஆங்காங்கே துரோகம் செய்ததாக கூறப்படுவர்கள் மீது முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகின்றார். 
 
இந்நிலையில் கரூர் தொகுதியின் எம்.எல்.ஏவும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், முன்னாள் கட்சியின் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜியால் பழிவாங்கப்பட்டார் என்றும் அவரது பணத்தில் தான் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பேங்க்.சுப்பிரமணியன், வாக்கிற்கு ரூ ஆயிரம் கொடுத்ததாக கூறி, ஊடகங்களிலும், உளவுத்துறையினரிடம் வதந்தியை கிளப்பி அ.தி.மு.க கட்சியில் ஒரு கோஷ்டி பூசலை ஏற்படுத்தி, தன்னுடைய ராஜ தந்திரத்தால் செந்தில் பாலாஜியின் பெயரை ரிப்பேர் செய்தவர் தம்பித்துரை.
 
ஏனென்றால் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளருமான தம்பித்துரை, முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜியின் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க அம்மாவிற்கே ஆர்டர் போட்டதாக போயஸ் கார்டன் வட்டாரம் தெரிவிக்கிறது. 
 
இந்நிலையில் ஏற்கனவே தன்னுடைய செல்லப்பிள்ளையாக வலம் வந்த செந்தில் பாலாஜியின் பிரச்சினை தான் என்ன என்று அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பக்கம் திரும்ப, தற்போது கரூர் தம்பித்துரையின் நிலைமை கட்சியில் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.
 
என்னெவென்றால், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் கரூர் வேட்பாளராக களம் கண்ட காங்கிரஸ் வேட்பாளர் பேங்க்.சுப்பிரமணியன், அக்கட்சியின் மாவட்ட தலைவரும், கரூர் கொடைக்குறிசில் என்றழைக்கப்படும், கே.சி.பழனிச்சாமியின் நண்பரும் ஆவார். 
 
இந்நிலையில், பேங்க்.சுப்பிரமணியனின் மகன் ஜெகதீஸ் (தற்போது கரூர் பெருநகராட்சி கவுன்சிலர்) உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட போது, தன்னுடைய மகன் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக சுமார் ரூ 60 லட்சம் நகராட்சி கவுன்சிலர் பதவிற்காக மட்டும் தேர்தலுக்காக அவரது தந்தை பேங்க்.சுப்பிரமணியன் செலவு செய்தாராம். மேலும், கரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளும், கல்வி நிறுவனங்கள் மற்றும் பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். 
 
பெரிய கோடீஸ்வரர் கட்சியை வைத்து மட்டுமே சம்பாதித்துள்ளார் என்று கட்சியினரே தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தன்னுடைய சொந்தமகன் அதுவும் கவுன்சிலர் ஆவதற்கே ரூ 60 லட்சம் செலவு செய்தவர், தன்னுடைய வெற்றிற்காக என்னவேண்டுமானாலும் செய்வார் என்று ஒரு புறம் யோசிக்க வேண்டியுள்ளது. மேலும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கோடீஸ்வர வேட்பாளரும், தி.மு.க கட்சிக்கே நிதியை அள்ளித்தருபவருமான கரூர் கே.சி.பழனிச்சாமியும் சில கோடிகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் தி.மு.க கட்சி கரூரை பொறுத்தவரை கவலைக்கிடமான நிலையில் அதாவது தன்னுடைய கட்டுப்பாட்டில் (அ.தி.மு.க கட்சிக்கு கீழ் கொண்டு வந்த) செந்தில் பாலாஜியை பழிவாங்க ஒவ்வொரு தி.மு.கவினரும், நேரம் பார்த்து காத்திருந்த நிலையில் செந்தில் பாலாஜியின் கட்சி பதவியும் பறிபோனது. 
 
போக்குவரத்து துறை அமைச்சர் பதவியும் பறிபோனது. எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது (ஏனென்றால் அரவக்குறிச்சி தொகுதியில் தான் போட்டியிட்டு இருந்தால், அங்கே தான் தேர்தலே நடக்க வில்லையே) இந்நிலையில் தி.மு.க வினருக்கு உற்சாகம் தங்கள் (தி.மு.க) கட்சிக்கு முடிவு கட்டிய கரூர் செந்தில் பாலாஜியை பழிவாங்க, அவர்களுக்கு ஒரு நல்ல நேரம் தான் இந்த தேர்தல் செந்தில் பாலாஜியை பழிவாங்க துடித்தனர். 
 
அதற்கு தி.மு.க வை சார்ந்த கரூர் கே.சி.பழனிச்சாமி மூலமாக அ.தி.மு.க வை சார்ந்த தம்பித்துரையும் கூட்டு சதியில் ஈடுபட்டார். பின்னர் ஒவ்வொரு குறைகள் அ.தி.மு.க விற்குள் நடந்தால் அதற்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்று திட்டமிட்ட சதி ஏற்படுத்தினர். இந்நிலையில் கரூர் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் பேங்க்.சுப்பிரமணியன் வெற்றி பெறுவதற்காக பணம் கே.சி.பி மற்றும் தம்பித்துரை மூலம் பட்டுவாடா செய்யப்பட்டு, பழியை அ.தி.மு.க வை சார்ந்த செந்தில் பாலாஜி மீது போட்டனர்.
 
ஏன் இந்த பழி தம்பித்துரைக்கு?
 
கடந்த 2013 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெருமளவில் பேசப்பட்டவர் அ.தி.மு.க வை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை, ஏனென்றால் அப்போது அ.தி.மு.க. நாடாளுமன்ற  குழுத்தலைவர்  மற்றும் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை, வரும் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடாமல், அரசியலில் இருந்து ஒதுங்கலாம் அல்லது கட்சி மாறலாம் என தெரிந்தது. இது ஆங்காங்கே இணையதளம் மற்றும் சமூக தளங்கலில் பெரும்பாலும் பேசப்பட்டு வந்தன.
 
எம்.ஜி.ஆர் காலத்து விசுவாசியான தம்பிதுரை, கடந்த இரண்டு (2011 லிருந்து 2013 வரை) வருடங்களாக அ.தி.மு.க. தலைமை மீது வருத்தத்தில் உள்ளார் என்றும், தொடர்ச்சியான சில விரும்பத்தகாத சம்பவங்கள் 30 வருடத்துக்கு மேல் அரசியலில் இருக்கும் அவரை மனத்துயரத்தில் தம்பித்துரையை ஆழ்த்தி விட்டதாக அவர் தரப்பினரே கூறியுள்ளனர்.
 
மேலும், அப்போது, டாக்டருக்கு படித்த அவரது மகள் வேலூர் காங்கிஸ் முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன் மகனை விரும்பியபோது, அ.தி.மு.க.வுடன் காங்கிரசுக்கு கூட்டணி அமையும் வரை திருமணத்தை தள்ளிப்போட சொன்னார். ஆனால், கூட்டணி நிறைவேறாமல் தள்ளிப்போக அவர் பெண் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி, திருமணத்துக்கு ஒப்புதல் கேட்டார்.
 
இந்த கடித விவகாரத்தில், ஜெயலலிதாவின் பி.ஏ வும், நமது எம்.ஜி.ஆரின் பொறுப்பாளருமான பூங்குன்றன் எதோ தகிடுதத்தம் செய்தார் என்று கூறப்படுகிறது. தம்பித்துரை மகளின் கடிதத்துக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பதிலே இல்லை.
 
கடைசியில் அந்த பெண் திருமணம் செய்து கொண்டார். சொந்த மகள் கல்யாணத்துக்கு செல்லமுடியாத சூழ்நிலை பூங்குன்றனால் ஏற்பட்டுவிட்டது என்பது தம்பித்துரையின் வருத்தம். (அப்போது தே.மு.தி.க எம்.எல்.ஏ மோகன் ராஜ் மகனுடன் அ.தி.மு.க. அரசின் பிரதிநிதியாக இருந்த நரசிம்மன் மகள் திருமணம் நடந்து அவரும் செல்ல முடியாத சூழ்நிலை. கடைசியில் நரசிம்மன் டில்லி பிரதிநிதி பதவியே பறிக்கப்பட்டது).
 
1984-ம் ஆண்டே துணை நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரைக்கு பல கட்சிகளிலும் நண்பர்கள் உண்டு. டில்லியில் மிக எளிதாக யாராலும் அணுகப்பட கூடியவர் அவர்.
 
அரசியல் வேறு, குடும்பம் வேறு என்று பிரித்து பார்க்காமல், உறவினர் மத்தியிலும், மாற்றுக் கட்சி அரசியல் நண்பர்கள் மத்தியிலும் அவமானப்படுத்தி விட்டது தன்னுடைய சொந்தக் கட்சி தலைமை என்பது தம்பிதுரைக்கு வருத்தம்.
 
வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல், பெண் திருமணம் ஆன கொஞ்ச நாளில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை களத்தில் இறக்கி விடப்பட்டு, ஞானசேகரன் வீட்டில் ரெயிடு நடத்தியது. துடித்துப் போனார் தம்பிதுரை.
 
அப்போது, தமிழக அரசால் எடுக்கப்பட்ட  இந்த நடவடிக்கையின் பின்னணியில் யார் இருந்தார்கள் என  தமது சென்னை தொடர்புகள்  மூலம் தம்பித்துறை  விசாரித்ததில், கிடைத்த தகவல்கள் அவரை அதிர வைத்தன. அவரால் வளர்த்து விடப்பட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமியும், நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும், பூங்குன்றனும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையின் பின்னணியில் இருக்கலாம் என்ற சந்தேகம் நெருட ஆரம்பித்து விட்டது.
 
அடுத்த அடியாக, அ.தி.மு.க.-வின் சாதாரண கட்சி உறுப்பினர் ஒருவரால், தம்பிதுரை மீது நில அபகரிப்பு வழக்கு போடப்பட்டது. அதன் பின்னணியிலும், இந்த மூவர் கூட்டணி இருந்தது என்பதாக ஒரு பேச்சு உண்டு.
 
அப்போது  எதற்காக தம்பித்துறைக்கு எதிராக காய் நகர்த்த வேண்டும்?
 
அடுத்த பக்கம் பார்க்க...

காரணம், பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வில்லங்கமாக வந்தால், அல்லது, முதல்வரின் டில்லி அரசியல் பிரவேசம் நடந்தால், ‘மாற்று முதல்வர்’ ஒருவரை தேட வேண்டிய நிலை ஏற்படும். தம்பித்துரை சீனியர். அவர் போட்டியாக வருவார் என்று கணக்கு போட்டு, ஓ. பன்னீர்செல்வமும், கே.பி. முனுசாமியும் கை கோத்துக்கொண்டு உள்கட்சி அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டனர் என்கிறார்கள்.
 
அடுத்த விஷயம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது. அதிலும் தமக்கு சிக்கல் ஏற்படுத்தப்படலாம் என்ற சந்தேகம் தம்பித்துரைக்கு உண்டு.
 
தம்பிதுரை அப்போது கரூர் தொகுதி எம்.பி என்றாலும், அவர் சொந்த மாவட்டம் கிருஷ்ணகிரி. அவர் அரசியல் மையமெல்லாம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான். முன்பு தருமபுரி தொகுதி எம்.பியாக இருந்துள்ளார். திருமணம் நடந்தபின், தமது மனைவியின் ஊரான கரூரில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.
 
அங்கும் பிரச்சினை.  தம்பிதுரையின் சிஷ்யர் போல் செயல்பட்டு வந்த போக்குவரத்து அமைச்சர் செந்தில், கட்சிக்குள் தம்பித்துரையின் எதிர் அணியால் கொம்பு சீவப்பட்டு தம்பிதுரையை அலட்சியம் செய்ய ஆரம்பித்தார். அரசுதிட்ட விழாக்களில் லோக்கல் எம்.பியான தம்பிதுரை பெயர், சொந்தக் கட்சியினராலேயே  இருட்டட்டிப்பு  செய்யப்பட்டது.
 
ஒரு பக்கம், தன்மீது நடக்கும் தாக்குதல்களை கண்டு கொள்ளாத கட்சித் தலைமை, மறுபக்கம் கட்சிக்குள் எதிர் அணியின் உள்கட்சி அரசியல் என்று வெம்பிப்போன தம்பிதுரை, ஒரு கட்டத்தில் திருப்பி அடிக்க ஆரம்பித்து விட்டார்.
 
உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தம்பிதுரையின் சிஷ்யபிள்ளை. அவரை வைத்து, சென்னை பச்சையப்பா அறக்கட்டளை உறுப்பினர் தேர்தலில் ஓ.பி.எஸ். சிபாரிசு செய்த வேட்பாளரை மட்டும் தோற்கடிக்க வைத்த சம்பவம் ஒன்று நடந்தது. ஓ.பி.எஸ்., தமது ஆளை வீழ்த்தியது யார் என்று சிறிது காலம் தேடிக்கொண்டு இருந்தார்.இதையடுத்து தம்பித்துரை, கட்சி தலைமை மீதுள்ள மன வெதும்பலை பல வகையில் காட்ட ஆரம்பித்து விட்டார்
 
சமீபத்தில் தம்பித்துரை, டில்லியில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலுவை தன் காரில் ஏற்றிச் சென்றது கட்சி அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. எதைப் பற்றியும் கவலைப் படாமல், பல்வேறு தமிழக விவகாரங்களில் இருவரும் இணைந்தே செயல்படுகிறார்கள். கட்சியை தாண்டி தமிழக அரசியல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் அரசியல் பக்குவம் உள்ளவர் தம்பிதுரை என்றாலும், தம்பிதுரை எதற்கும் துணிந்து விட்டார் என்றே நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றன.
 
கடந்த ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த தம்பிதுரை, மீண்டும் தேசிய அரசியலுக்கு செல்ல விருப்பம் காட்டாமல் இருந்தார். 2006-ம் ஆண்டு, சட்டசபை தேர்தலில் பர்கூரில் வெற்றி பெற்று மீண்டும் சட்டசபை உறுப்பினர் ஆனார். ஆனால் அதன்பின், கட்சி தலைமை விருப்பத்தின்படி, கரூரில் நாடாளுமன்ற வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார்.
 
அந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தம்பித்துரை இல்லாமல், வேறு யார் நிறுத்தப்பட்டிருந்தாலும், தோல்வியடைந்திருப்பார்கள். காரணம், பணபலம் மிக்க கே.சி.பழனிசாமியை எதிர்த்து போட்டியிட வேண்டியிருந்தது. அந்தத் தேர்தலில் தம்பித்துரை சுமார் 25-30 கோடி வரை செலவிட்டதாக ஒரு பேச்சு உள்ளது.
 
ஆனால், டில்லியில் எதிர்க்கட்சி எம்.பியாக உள்ளதால், அதை திருப்பி எடுக்க முடியாத நிலை. அப்போது 2014 ல் நாடாளுமன்ற தேர்தலில், வேலூர் தொகுதியில், தம்பிதுரையின் சம்பந்தி ஞானசேகரன் வேட்பாளராக நிற்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றும் இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமை வேண்டுமென்றே ஞானசேகரனுக்கு எதிராக வேலூர் தொகுதியில் நிற்க சொல்லலாம் என்ற பயமும் நிச்சயம் தம்பித்துரைக்கு இருந்தது.
 
கடந்த காலங்களில், கடலூரில் எம்.சி. சம்பத்தையும் அவர் தம்பியையும் எதிர் எதிராக தேர்தலில் போட்டியிட வைத்தவர் ஜெயலலிதா. தாமரைக்கனியை அவமானப்படுத்த அவர் மகனையே தேர்தலில் எதிராக நிறுத்தி, மந்திரி பதவியும் கொடுத்தவர். இந்த வரிசையில் அடுத்து தமது டர்ன் என்ற அச்சமும் தம்பித்துரைக்கு இருக்கலாம்.
 
வேலூர் தொகுதியில் சம்பந்திக்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தம்பித்துரை விரும்பவில்லை என்று தெரிகிறது. அதே நேரத்தில், கரூரில் செந்தில் பாலாஜியை நம்பி களம் இறங்கினால், நிறையவே உள்ளடி வேலைகள் நடக்கும் என்பது தம்பித்துரைக்கு தெரியும். இதனால், கரூரில் போட்டியிடவும் அவர் விரும்பவில்லை.
 
அதே நேரத்தில், கரூரில் ராகுல் காந்திக்கு நெருக்கமான ஜோதிமணி அல்லது கார்த்தி சிதம்பரம் நிறுத்தப்படலாம் என்று அப்போதே பேச்சு பரவலாக பேசப்பட்டது.
 
ஆனால் இந்த நிலையில், வரும் தேர்தலை தவிர்க்கலாம் என்ற மன ஓட்டத்தில் தம்பிதுரை இருந்தார். மேலும் கட்சியில் இருந்த அவர்களது நண்பர்களும்  அவரது உறவினர்கள் மற்றும் கட்சி நிர்ப்பந்தம் செய்தால் வயதைக்காட்டி ஒதுங்கி கொள்ளும் திட்டத்தில் உள்ளாதாக தெரிந்தது.
 
தம்பிதுரைக்கு நிறைய கல்லூரிகள் உண்டு. கட்சி அளவில் தொடர்ந்து நெருக்கடி தொடர்ந்தால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தன் சொத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி கொள்ளும் வகையில், காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசிய கட்சிகளில் சேரலாம். தம்பிதுரை பிரச்சினையை புரிந்து கொண்ட திமுகவும் நூல் விட்டு பார்த்துக் கொள்ளலாம் என்றும், எப்படியோ கட்சியில் மீண்டும் சீட்டு வாங்கி ஜெயித்து விட வேண்டுமென்று திட்டம் தீட்டினார். அப்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட தம்பித்துரைக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால் கரூர் மக்களவை தொகுதியில் நான்கு மாவட்டங்கள் உள்ளன. 
 
கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), அரவக்குறிச்சி என்று மூன்று தொகுதிகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் தொகுதியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை தொகுதியும், திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி என்று 4 மாவட்டங்கள், 6 தொகுதிகள் இருந்து வருவதால், ஏற்கனவே போட்டியிட்டு ஜெயித்த எம்.பி தம்பித்துரை போட்டியிடும் போது, எனது (மக்களவை தொகுதிக்குட்பட்ட) தொகுதிக்குட்பட்ட மக்கள் குறைகள் ஏதேனும் இருந்தால் கூறுங்கள் அதை கறிக்கட்டையின் வழியாக சுவற்றில் எழுதினால் போதும்., அது டில்லியில் உள்ள என் காது வாயிலாக பட்டு, உடனே நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். 
 
2009-ல் இது போல வாக்குறுதி கொடுத்த எம்.பி தம்பித்துரை அதுவரை எதுவும் செய்யாமல் இன்று 2014 ல் மீண்டும் ஆங்காங்கே போட்டியிடுகிறார் என்று விரக்தியில் அ.தி.மு.க வினரும், பொதுமக்களுக்கு இருந்த போது ஆங்காங்கே 2014 ல் வாக்குகள் கேட்டு செல்லும் போதெல்லாம் கருப்பு கொடிகள் கட்டி தங்களது எதிர்ப்பை காட்டினார். விராலிமலையில் கனிமொழியை பற்றி பேசிய போது காரை அடித்து உடைத்தனர் அப்பகுதி பொதுமக்கள். 
 
இருந்தாலும் அப்போதைய மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி அனைவரின் காலில் விழுந்து நான் பொறுப்பேற்று கொள்கிறேன் என்னை நம்பி வாக்களியுங்கள் என்று அனைத்து வித மக்களிடமும், கேட்டுக் கொண்டதோடு, கரூர் தம்பித்துரையை எதிர்த்து நின்ற தி.மு.க வை சார்ந்த முன்னாள் அமைச்சர் (அ.தி.மு.க விலிருந்து விலகியவர்) சின்னசாமி போட்டியிட, செந்தில் பாலாஜியோ விட வில்லை. 
 
அடுத்த பக்கம் பார்க்க...

சின்னசாமி என்ற பெயர் இருந்த இரண்டு வேட்பாளரை அ.தி.மு.க கட்சிக்கு ஆதரவாக டம்மி வேட்பாளராக நிறுத்தினார். மேலும் அந்த சின்னசாமி என்கின்ற இரண்டு வேட்பாளர்களையும், அ.தி.மு.க விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் தூண்டியதோடு, முழு வீச்சில் செயல்பட்டு, தம்பித்துரைக்கு வெற்றி கண்டிப்பாக இல்லை என்று நினைத்த தம்பித்துரைக்கே புத்துணர்வு காட்டினார். மேலும் மீண்டும் தம்பித்துரை கட்சி மீதும், கரூர் மக்களவை தொகுதி மேலும் அக்கறை காட்டவில்லை. 
 
மீண்டும் வலுத்தது சர்ச்சை, அப்போது அ.தி.மு.க வினர் கரூர் எம்.பி யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரையை காண சென்றால் நீங்கள் யார், எந்த மாவட்டம் என்று அவமானபடுத்தும் நோக்கோடு பேசுவாராம். உண்மையான கட்சி தொண்டனை அம்மாவே அறியும் போது மக்களவை துணை சபாநாயகரும், கரூர் எம்.பியுமான தம்பித்துரைக்கு தெரியாதா? இல்லை நடிப்பா? என்று அ.தி.மு.க வினரே விரக்தியில் ஈடுபட்ட நிலையில் கடந்த 2014 ம் ஆண்டு பெங்களூரு பார்ப்பன நீதிமன்றத்தில் ஜெயலலிதா சிறைக்கு செல்ல, தம்பித்துரை பெயர் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் லிஸ்டில் அடிபடும் என்று காத்து கடக்க, ஆனால் முன்னாள் முதன்மை செயலாளர் ஷீலா பாலாகிருஷ்ணன, செந்தில் பாலாஜி பெயர் அடிப்பட்டவுடன் செந்தில் பாலாஜியை பழிவாங்க திட்டமிட்டார். 
 
ஆனால் அப்போதும் ஒ.பி.எஸ் தான் முதல்வர் ஆனார். இந்நிலையில் விரக்தியடைந்த தம்பித்துரை ஒவ்வொருவராக பழிவாங்க ஆரம்பித்தார். அப்போது தான் கரூர் மாவட்ட செயலாளராகவும், போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜியிடம் இருந்து பறித்து, அப்பதவியை தற்போது தம்பித்துரையின் ஆதரவாளர் என்று கூறப்படும் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் ஏற்கனவே அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீழ்ந்தது எப்படி? 
 
கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் தற்போது உள்ள விஜயபாஸ்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டது எப்படி என்றால். அப்போது, 
கரூர் மாவட்டச் செயலாளர், போக்குவரத்துறை அமைச்சர் என்ற இரு வலுவான பதவிகளை வகித்து வந்த செந்தில்பாலாஜி கடந்த வருடம்  அதிரடியாக அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
 இதனையடுத்து, அப்போது, கரூர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு, தாந்தோனி ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார்.
 
இவர் நிமியக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதில், அப்போது, கரூர் மாவட்ட  பணிகளை நாமக்கல் மாவட்ட செயலாளரும், போக்குவரத்துச் செயலாளருமான  தங்கமணி கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. 
 
விஜயபாஸ்கர் வீழ்ந்தது எப்படி என அதிமுக தரப்பில் விசாரித்த போது, கரூர் எம்பியும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை மற்றும் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தாக கூறப்படுகிறது. 
 
இது குறித்து கார்டன் தரப்புக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கியப்புள்ளி ஒருவர் தனது ஈரோடு திமுக நண்பர் உதவியோடு, கண்காணிப்பில் புலியாக உள்ளவரின் உதவியோடு முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார். மேலும், முதல்வர் ஜெயலலிதா கோபம் கொள்ளவைக்கும் விதமாக உள்ள சில தகவல்களை விஜயபாஸ்கர் செய்துள்ளதாக தகவல் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே, சத்தமின்றி விஜயபாஸ்கர் வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
ஆனால், விஜயபாஸ்கர் நீக்கம் குறித்து கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் மத்தியில் அப்போதே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பேச்சு எழுந்துள்ளது குறிப்பிடதக்கது. 
 
தற்போது சென்னையில் நடந்து முடிந்த அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் செந்தில் பாலாஜியை பற்றி முதல்வர் ஜெயலலிதா தீவிர விசாரணை செய்ய தனி அக்கறை காட்டவும் ஆரம்பித்துள்ளார். என்னவென்றால் அரவக்குறிச்சி தொகுதியில் பிடிக்கப்பட்ட தொகை பல கோடி எந்த தொகுதிக்கு சென்றுள்ளது என்றும் அது நத்தம் விஸ்வநாதனுக்காக கொண்டு செல்லப்பட்டது என்றும், ஏன் செந்தில் பாலாஜி மீது இவ்வளவு பழி போடுகிறார். தம்பித்துரை, அடுத்த ஒ.பி.எஸ் ஆக 2013 ல் இருந்தே திட்டம் தீட்டிய விஷயம் எல்லாம் போயஸ் கார்டன் தோட்டம் வரை சென்றுள்ளது. 
 
மேலும் தம்பித்துரையின் ஆதரவாளர் யார், யார் என்று தற்போது உளவுத்துறையினர் ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர். மேலும் ஏறகனவே டில்லி உச்சநீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுபட தலைவலி ஒன்று இருக்க, அது ஒற்றைத்தலைவலியாக கருதி வந்த நேரத்தில் தம்பித்துரை அடுத்த ஒ.பி.எஸ் ஆ என்று நினைத்து மேலும் ஒரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளார். தம்பித்துரை. மேலும் மக்களவை துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும், அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் தனிக்கவனம் செலுத்தாமல் தனது கல்லூரிகளின் வளர்ச்சிக்கு மட்டுமே தனிக்கவனம் செலுத்தியது. பிரதமரிடம் பேசிய போது தெரிந்ததாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.