1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார் – செய்தியாளர்
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2015 (18:28 IST)

தலையை மிஞ்சும் தலைமைக்கழக பேச்சாளர் – கரூர் கேபிள் டி.வி அடாவடி

மாஜியை பற்றியோ, மாஜியின் தம்பியை பற்றியோ டி.வியில் வந்தால் தனியார் தொலைக்காட்சியை துண்டிக்கிறார் – ஊடக நிருபர்கள் அடிமைகள் போல வாழ வைக்கும் அரசு கேபிள் டி.வி எம்.எஸ்.ஓ வை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு


 

 
கரூரில் தமிழக முதல்வரின் செயல்திட்டங்களை வெளிப்படுத்தி ஓளிபரப்பும் கேபிள் தொலைகாட்சி நிர்வாகம் மெத்தனம் – அம்மாவையும், அம்மா சார்ந்த அரசையும் காக்க மாவட்ட ஆட்சியரிடம் மூத்த பத்திரிக்கையாளர் மனு
 
கரூர் மாவட்ட தனியார் தொலைகாட்சி நிருபராக பணியாற்றி வருபவர் ஆனந்தகுமார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது., 
 
பொருள் : மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சாதனையை விளக்கும் கேபிள் டி.வி யில் உள்ள குளறுபடி, கேபிள் டி.வி வருவாயை முடக்கும் தனிநபர் துதி பாடும் கேபிள் டி.வி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து மாண்புமிகு அம்மாவின் சாதனைகளை எடுத்துக்கூற வலியுறுத்தி:
 
மேன்மைமிகு மாவட்ட ஆட்சியர் அம்மா அவர்களுக்கு.,
 
இந்த மனு மூலம் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை மற்றும் நூதன முறையில் கேபிள் டி.வி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கொள்ளை திட்டத்தை அம்பலப்படுத்த விரும்புகிறேன்.
 
மேற்கண்ட முகவரியில் வசிக்கும் நான் கடந்த 1997 முதல் கரூர் மாவட்ட நிருபராக நாளிதழ்கள், தனியார் தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருகிறேன். அ.தி.மு.க, தி.மு.க என ஆட்சி மாறி மாறி வருவதும் எனக்கு தெரியும்., அதனால் மக்கள் பெறும் நன்மைகள், தீமைகளும் எனக்கு தெரியும். 
 
ஆகவே கடந்த 4 ½ ஆண்டுகளாக நாடு போற்றும் நல்ல சாதனைகளை உலகறியச்செய்யும், அம்மாவின் விசுவாசிகள் நிறைந்த உலகில் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவர்களுடைய செய்தி தவறாக ஒளிபரப்பினால் அந்த தனியார் கேபிள் டி.வி யை துண்டிக்காமல் அப்போது இருந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பற்றி தவறாக ஒளிபரப்பினால் உடனே கேபிள் டி.வி யை துண்டிக்கும், கைய வஞ்சகம் வாய்ந்த கேபிள் டி.வி எம்.எஸ்.ஓ வை பற்றி மாண்புமிகு அம்மாவின் கவனத்திற்கும் நான் எடுத்துச் சென்றுள்ளேன்.

இந்நிலையில் அவர் பதவியில் இருக்கும் போது,அமைச்சர் அண்ணன் வீட்டை விட்டு கிளம்பி விட்டார்., அண்ணன் அமைச்சர் வந்து விடுவார், அமைச்சர் அண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமைச்சர் அண்ணன் கோயிலில் சாமி கும்பிடுகிறார். அமைச்சர் அண்ணன் கோயிலில் குத்துவிளக்கேற்றுகிறார். என அண்ணன் அமைச்சர் என்று தான் அரசு டி.வியான TACC T.V செயல்பட்டு வந்ததே தவிர அம்மா, அம்மா என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போய் விட்டது. இருப்பினும் அமைச்சர் பதவி பறிக்கபட்ட பின்னர் அந்த டி.வியையே முடக்கினார்கள். ஏனென்றால் அமைச்சர் பதவிதான் இல்லையே அப்புறம் எதற்கு அரசு டி.வி என்ற வகையில் கரூர் எம்.எஸ்.ஓ நிர்வாகம் செயல்பட்டு வந்தது.
 
பின்னர் தற்போது மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக கழக பணி மட்டுமில்லாமல் அரசு நிகழ்ச்சிகளிலும், சட்டென்று உரிய நேரத்தில் கலந்து கொள்ளும் அண்ணன் விஜயபாஸ்கர் அவர்களின் செய்தி மற்றும் நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல், ஆங்காங்கே அரசு கேபிள் டி.வியில் ஒளிபரப்பாகும் டேக் டி.வி என்பதை கரூரில் மட்டும் தான் காணப்படுகிறதே தவிர குளித்தலை, இலாலாபேட்டை, சித்தலவாய் ஆகிய பகுதிகளி காணப்படுவதில்லை. ஆகவே நாடு போற்றும் நான்காண்டு சாதனைகளை விளக்கி எடுத்துக்கூற டேக் டி.வி முழுவதும் அம்மாவின் செயல்பாடுகளையும்., அ.தி.மு.க வின் செயல்பாடுகளையும் ஒளிபரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
மேலும் அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் மதுபானக்கடைகளையும், மணல் குவாரிகளையும் முற்றுகையிட சென்றாலோ, அல்லது அந்நியர் தலையீடு இருந்தாலோ எப்படி உடனே கைது நடவடிக்கை எடுக்கிறோர்களோ, அப்படி அரசு கேபிளில் வரும் வருமானத்தில் கையை வைக்கும் எம்.எஸ்.ஓ வையும் கைது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் பத்திரிக்கை மற்றும் நாளிதழ்களை எரிக்க முயற்சி செய்யும் நபர்களை எப்படி கைது செய்கிறீர்களோ, அதே போல தனியார் தொலைக்காட்சிகளை வேண்டுமென்றே அந்த நிமிடத்தில் துண்டிக்கும் எம்.எஸ்.ஓ வையும் கைது செய்ய வேண்டுகிறேன்.
 
மேலும் கேபிள் எம்.எஸ்.ஓ என்பவர் தலைமைக்கழக பேச்சாளர் எனக்கூறப்படுகிறது. கேபிள் எம்.எஸ்.ஓ திரு அண்ணன் சந்திரசேகரன், தலைமைக்கழக பேச்சாளர் திரு அண்ணன் ஜெயம் மூர்த்தி ஆகியவர்கள் இருவரும் ஒருவரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றில் மாற்றுப்பெயர் வைத்தாலும், ஐ.பி கொடுத்தவர்கள் தான் அ.தி.மு.க விற்கு செல்ல முடியும் என எதிர்க்கட்சியினர் எளனம் செய்வதை அம்மாவின் கவனத்திற்கு எடுத்து செல்ல என இந்த நேரத்தில் கூறிக்கொள்கிறேன். 
 
மேலும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் செயல்களையும், திட்டங்களையும் மேலும் தொடர்ந்து கரூர் மாவட்ட எம்.எஸ்.ஓ தொடர்ந்து புறக்கணித்தாலும், கேபிள் டி.வி.யை துண்டித்தாலும் நீங்கள் நடவடிக்கை எடுத்து அம்மாவையும், அரசையும் காக்க வேண்டுகிறேன். நாடு போற்றும் நான்காண்டு சாதனைகளை கேபிள் டி.வி மூலம் ஒளிபரப்பி அம்மாவின் கரத்தை வலுப்படுத்துவே இந்த மனு. 
 
மேலும் தமிழகத்தில் குறிப்பாக கரூரில் தமிழ் சேனல்கள் துண்டிக்கப்படுவதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என அம்மனுவில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாஜியின் கட்டுப்பாட்டில் தான் இன்னும் கேபிள் டி.வி நிர்வாகம் இயங்குகிறது. ஏற்கனவே சுமார் 10 க்கும் மேற்பட்ட கேபிள்கள் இயங்கிய நிலையில் அ.தி.மு.க தலைமைக்கழக பேச்சாளரும், கேபிள் டி.வி சக்கரவர்த்தியாக விளங்கும் ஜெயம் மூர்த்தி என்கின்ற சந்திரசேகரன் என்பவரது கட்டுப்பாட்டில் தான் இன்றும் இயங்குகிறது. 
 
அரசு செய்திகளும், அ.தி.மு.க செய்திகளும் இவர் கைஅசைத்தால் மட்டுமே உள்ளூர் தொலைக்காட்சிகளில் போடப்படுவதாகவும், ஏற்கனவே இவர் ம.தி.மு.க வில் சங்கொலி மூர்த்தி என்ற அழைக்கப்பட்டு , பின்னர் அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்டு பின்னர் மாஜியின் அப்போதைய எம்.எல்.ஏ காலம் கட்டத்தில் கேபிள் டி.வி ஆரம்பித்து சுமார் பல கோடி ரூபாய்களை அரசுக்கு நஷ்டக் கணக்கு காட்டி புது புது உள்ளூர் தொலைக்காட்சிகளை நடத்தியவர் ஆவார். 
 
மேலும் தலைமையை மிஞ்சும் தலைமைக்கழக பேச்சாளராக கரூர் மாவட்டத்தில் காணப்படுவதாகவும், அப்போதைய மாஜி செந்தில் பாலாஜி முதல்வர் கனவு கண்டார் எனில் இவர் தமிழக கேபிள் டி.வி கார்ப்பேரஷன் தலைவராகவும், அந்த துறை அமைச்சராகவும் கனவு கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ சிறப்பான செயல்திட்டங்களை
 
செயல்படுத்தும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பார்வை கரூரில் பட்டு கேபிள் டி.வி யையும், அதன் வருமானத்தையும் முடக்கி இருக்கும் ஜெயம் மூர்த்தி மீது எதாவது நடவடிக்கை எடுப்பாரா? என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம்