வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2017 (15:35 IST)

நூதன திருட்டு கும்பல் தலைவனை மடக்கி பிடித்த கரூர் டி.எஸ்.பி

கரூர் பேருந்து நிலையம் எதிரே தனியார் தங்கும் விடுதியில் ஒரு கும்பல் ஆசை வார்த்தை கூறி, மக்களின் பணத்தை மூன்றாக்கும் வித்தை காண்பிப்பதாக ஏற்கனவே இரு குற்றவாளிகளை கைது செய்த கரூர் காவல்துறையினர் அந்த கூட்டத்தின் தலைவராகவும், தப்பியோடி தலைமறைவான முக்கிய குற்றவாளியை கரூர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஏற்கனவே கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, சிங்கம்பட்டி நடுத்தெரு பகுதியை சார்ந்த திருவேங்கடம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பிரதீப், சண்முகம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.


 

அப்போது தப்பியோடிய சுந்தரமூர்த்தியை தேடி வந்த காவல்துறையினர் கரூர் பைபாஸ் சாலை திருக்காம்புலியூர் ரவுண்டானாவில் வாகன சோதனையின் போது, சொகுசு காரான (VOLKSWAGAN) என்ற காரை ஒட்டி வந்த சந்தேகத்திற்கினமான ஒருவரை விசாரிக்க முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவிக்க சந்தேகமடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, தப்பியோடிய சுந்தரமூர்த்தி என்பதும், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அடுத்த வீரணம்பாளையம் பகுதியை சார்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து இரண்டு சொகுசு கார்கள் மற்றும் டூப்ளிகேட் பணத்தை அடிக்கும் பிரிண்டர், அரைகிலோ வெள்ளி, ஒரிஜினல் பணம் ரூ 1 லட்சம், பழைய பணங்கள் ரூ 1 லட்சம், தற்போது 20 லட்சம் மாற்றுமளவிற்கு ஸ்டாக் உள்ளதாகவும் கையும் களவுமாக பிடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சினிமா பட பாணியில் ஆங்காங்கே ரைஸ் புல்லிங், இரிடியம் என்கின்ற கோபுர கலசங்களை இவர்கள் மாற்றியுள்ளதாகவும் தெரிகின்றது. மேலும் ஏற்கனவே பிடிபட்ட நபர்கள் குறித்து பத்திரிக்கையில் வந்ததையடுத்து தமிழக அளவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் குவிவதாகவும், தற்போது பிடிபட்ட சுந்தரமூர்த்தியின் விவரம் குறித்தும் தற்போது வெளிவந்துள்ளதாகவும், இவர்களை பற்றிய புகார்கள் மேலும் கிடைக்க, எவ்வளவு தொகை கிடைக்கும் என்றும் தெரியவரும் என்றும் போலீஸார் தெரிவித்ததோடு, பொதுமக்கள் இவர்களிடமிருந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு இது போல யாராவது ஏமாற்ற முயன்றால் உடனே அருகில் உள்ள காவல்நிலையங்களில் புகார் தெரிவிக்குமாறும் கரூர் டி.எஸ்.பி கும்மராஜா வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இதே போல, மாங்காச்சோளிப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற சேகர் என்கின்ற கரடி சேகர் என்பவரையும் வாங்கல் போலீஸார் கைது செய்ததாகவும் கரூர் கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (DSP) கும்மராஜா தெரிவித்தார். ஒரு கிலோ ரூ 25 ஆயிரம் என்ற மதிப்பில் பிடிப்பட்ட இந்த 9 கிலோ கஞ்சாவானது ரூ 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
 
-கரூரிலிருந்து சி.ஆனந்தகுமார்