வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (16:43 IST)

கரூர் மாவட்ட பா.ஜ.க வை சீரழிக்கும் முயற்சியில் கோபிநாத்

கரூர் மாவட்ட பா.ஜ.க வை சீரழிக்கும் முயற்சியில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் கோபிநாத் ஈடுபடுவதாகவும்,ரூ.200 கொடுத்தால் போதும் செய்தியாளர்கள் செய்தி போடுவார்கள் என்று ஆணவமாக பேசியதால், நிருபர்கள் கொந்தளித்துள்ளனர்.


 

 
இந்திய அளவில் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளில் தொலை நோக்கு பார்வை திட்டத்தை உருவாக்கி வருபவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் இவருடைய கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், பாரதீய ஜனதா கட்சியை அளிக்கும் முயற்சியில் பா.ஜ.க மாநில இளைஞரணி செயலாளர் கோபிநாத் தற்போது களமிறங்கியுள்ளார். 
 
அவருடன், அதே கட்சியின் தற்போதைய மாவட்ட தலைவர் முருகானந்தமும் கை கோர்த்த திட்டம் தற்போது பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சொளந்தரராஜன் வரைக்கும் புகார் சென்றுள்ளது. 
 
கரூர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி சார்பில் சுதந்திர தினத்தையொட்டி பேரணி ஒன்று நடந்தது. அந்த கூட்டத்தில் கரூரை சார்ந்த பா.ஜ.க இளைஞரணி செயலாளர் கோபிநாத் கலந்து கொண்டு பேசிய போது, நிருபர்கள் யாரும் வரவில்லை என்று மற்ற நிர்வாகிகள் கூறியுள்ளனர். 
 
அதற்கு திருச்சி பதிப்பை கொண்ட மலர் பேப்பர் மட்டும் வந்தால் போதும், மற்ற நிருபர்களுக்கு ரூ.200 கவர் கொடுத்தால் போதும் என்று ஆணவத்துடன் ”கோபி” கோபத்துடன் கூறியுள்ளாராம். ஆனால் இது குறித்து செய்தியாளர்கள் தெரிவிக்கையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோபிநாத்திற்கு பொறுப்பு போடப்பட்டது. ஆனால் இது நாள் வரை அவர் எந்த நிருபர்களையும் அழைத்து பேசியதில்லை. இந்த நாள், இந்த நிகழ்ச்சி செய்கின்றேன் என்று நோட்டீஸோ, தொலைபேசியோ, மெசேஜ், வாட்ஸ் அப் என்று எதுவுமே செய்ததில்லை. 
 
காரணம் கேட்டால் போஸ்டர் ரோட்டில் ஒட்டுகின்றோம் அல்லவா? அதை பார்த்து நிருபர்கள் வரட்டும் நிருபர்களுக்கு என்ன வேலை என்று நையாண்டியாகவும், ஆணவத்தோடும் பேசியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் தேசிய கொடி பேரணி நடைபெற்றது. கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் நீ.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இப்பேரணிக்கு எந்த நிருபர்களையும் கூப்பிடவும் இல்லை, வரத்தேவையும் இல்லை என்று கூறி நிருபர்களை அவமானப்படுத்தி விட்டார்.
 
இந்திய அரசியலமைப்பின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கை துறையை தற்போது மோடியின் அரசு தனிக்கவனம் செலுத்தி வரும்  நிலையில் இந்த கோபியின் அநாகரீகச் செயலும், ரூ.200 கொடுத்தால் போதும் நிருபர்கள் செய்தி போடுவார்கள் என்ற காதுபட கூறிய சம்பவத்தையடுத்து, உடனடியாக கட்சி பதவியிலிருந்து தூக்க விட்டாலோ, அல்ல, நிருபர்களிடம் மன்னிப்பு கேட்கா விட்டால் கரூர் மாவட்ட பா.ஜ.க செய்திகளை போடுவதில்லை என்று நிருபர்கள் போர்க்கொடி ஏந்தியுள்ளனர். 
 
மோடிக்கு வந்த சோதனையா அல்ல, தமிழக பாரதீய ஜனதா விற்கு ஏற்பட்ட சோதனையா என்று தெரியவில்லை. மேலும் இந்த கோபிக்கு ஒரே ஒரு நாளிதழ் நிருபர் மட்டும் பின்னணியில் உள்ளது தெரியவருகின்றது
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர்