Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகர் விஷால் முதலமைச்சராக நினைக்கிறார்: கருணாஸ் பொளேர்!

நடிகர் விஷால் முதலமைச்சராக நினைக்கிறார்: கருணாஸ் பொளேர்!


Caston| Last Updated: செவ்வாய், 18 ஜூலை 2017 (11:09 IST)
நடிகர் விஷால் தன்னை பயன்படுத்திவிட்டு, கழற்றிவிட்டுவிட்டார் எனவும் அவர் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் போன்றவற்றில் வெற்றி பெற்றால் முதல்வர் ஆகலாம் என விஷால் நினைப்பதாக நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார்.

 
 
நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக அதிமுக உடன் கூட்டணி வைத்து திருவாடணை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். இவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக கூவத்தூர் விடுதியில் இருந்தார்.
 
நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராக உள்ள கருணாஸ் சமீப காலமாக தனது நடிகர் சங்க கூட்டணியுடன் தொடர்பில் இல்லாதது போல தெரிகிறது. நடிகர் சங்க தேர்தலின் போது விஷால் அணியில் இருந்த கருணாஸ் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இந்நிலையில் சமீபத்தில் பிரபல தமிழ் வார இதழின் இணையத்துக்கு பேட்டியளித்த கருணாஸ் நடிகர் விஷால் மீது தனக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதில் நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக இருக்கும் நீங்கள் சமீப காலமாக சங்கத்தில் இருப்பது போலவே தெரியவில்லையே? என கேள்வி கேட்கப்பட்டது.
 
அதற்கு பதில் அளித்த கருணாஸ், நடிகர் சங்க தேர்தலின் போது ஊர் ஊரா செல்ல வழி தெரியாது. எங்க எப்படி போவதென்று தெரியாது. நாடக நடிகர்களை சந்திப்பது எப்படி என தெரியாது. அதற்காக அப்போது கருணாஸ் தேவைப்பட்டார்.
 
மேலும் ராதாரவியை எதிர்த்து வெற்றி பெற்றது பெரிய விஷயம். ஆனால் ராதாரவியை எதிர்த்து வெற்றி பெற்றது விஷால் மட்டுமே என அவர் நினைக்கிறார். நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் ஓட்டு வாங்கிட்டா அடுத்து முதலமைச்சர் ஆகிடலாம்முன்னு நினைச்சா என்ன பண்றது? என கருணாஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.


இதில் மேலும் படிக்கவும் :