Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.10 கோடி விவகாரம் - கருணாஸ் எம்.எல்.ஏ விளக்கம்


Murugan| Last Updated: செவ்வாய், 13 ஜூன் 2017 (11:45 IST)
கூவத்தூரில் யாரிடம் நான் பணம் வாங்கவில்லை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

 

 
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த போது, சசிகலா தரப்பில் முன்னிறுத்தப்படும் முதல்வருக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.எல்.ஏக்களுக்கு பல கோடி பேரம் பேசப்பட்டதாக நேற்று செய்தி வெளியானது.
 
இதில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ, தமீம் அன்சாரி மற்றும் தனியரசு எம்.எல்.ஏ ஆகியோருக்கு ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், மற்ற எம்.எல்.ஏக்களுக்கு ரூ.6 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில் கருணாஸ் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கூவத்தூரில் நான் என் நண்பரின் விடுதியில்தான் தங்கியிருந்தேன். கூட்டம் என்றதால்தான் அவர்களோடு கலந்துகொண்டேன். அமைச்சர்களிடம், கண்மாய் தூர்வாரப்பட வேண்டும், அதற்கு கூடுதலாக நிதி ஒதுக்குங்கள், என் தொகுதியில் அனைவருக்கு குடிநீர் கிடைக்க உதவுங்கள் என்றுதான் கேட்டிருக்கிறேன். 
 
தவிர எனது தேவைக்காகவோ, எனது அமைப்பின் தேவைக்காகவோ யாரிடமும் நான் பணம் கேட்டதும் இல்லை, வாங்கியதும் இல்லை. அப்படியிருக்க நான் பணம் வாங்கியதாக இப்படி அபாண்டமான பொய்யை, சரவணன் எம்.எல்.ஏ கூறியிருக்கிறார். அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்" என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :