வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (16:40 IST)

மதிமுக விலிருந்து விலகி திமுக வில் இணைந்தவர்களை வரவேற்கிறேன் : கருணாநிதி

மதிமுக விலிருந்து விலகி திமுக வில் இணைந்தவர்களை வரவேற்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார்.
 
மதிமுக விலிருந்து விலகிய அக்கட்சியின் பொருளாளர் மாசிலாமணி, நேற்று சென்னை அறிவாலயத்தில், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் முன்னிலையில், திமுக வில் இணைந்தார். அவருடன் மற்ற சிலரும் பலரும் திமுக வில் இணைந்தனர்.
 
இந்த விழாவில் கருணாநிதி பேசியபோது "மதிமுக விலிருந்து விலகி, திமுக வில் சேர்ந்தவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் பெருமைகளை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும். திராவிட இயக்க கொள்கைகளை காப்பாற்ற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். திமுக மகா சமுத்திரமாகும் வரை நான் ஓயமாட்டேன்” என்று கூறினார். 


 


 
மேலும் நான்காவது நாளாக தொடரும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அதில் “நாடு முழுவதும், லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்வதால், காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்கள் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. இது, முழுக்க முழுக்க மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்றாலும், சரக்கு போக்குவரத்து பாதிப்பால், மாநிலத்தின் வணிக நடவடிக்கைகள் தடைப்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படும். 
 
தமிழக அரசு, மத்திய அரசை தொடர்பு கொண்டு, அழுத்தம் கொடுக்க தயாராக இல்லை. எதற்கெடுத்தாலும், பிரதமருக்குக் கடிதம் எழுதும் முதல்வர் ஜெயலலிதா, வேலைநிறுத்தம் குறித்து கடிதம் எழுதாதது புதிராக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பேச்சு நடத்தி, போராட்டத்தை முடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.