கருணாநிதி வீடு திரும்பினார்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (18:51 IST)
கடந்த 15ஆம் தேதி உடல்நலக்குறைவால் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலைவர் கருணாநிதி இன்று மாலை வீடு திரும்பினார்.

 

 
திமுக தலைவர் கருணாநிதி மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் நோய் நோற்று காரணமாக கடந்த 15ஆம் தேதி இரவு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது மருத்துவ அறிக்கையும் காவிரி மருத்துவமனை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் இன்று மாலை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
 
மேலும் அவர் மருத்துவமனை இருக்கும் போது டிவி பார்க்கும் புகைப்படமும் வெளியானது. திமுக தொண்டர்கள் தலைவர் வீடு திரும்பும்போது மலர் தூவி வரவேற்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :