ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 மார்ச் 2019 (22:00 IST)

சென்ட்ரலுக்கு 'எம்.ஜி.ஆர்', எக்மோருக்கு 'கருணாநிதி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று பிரதமர் மோடி, எம்ஜிஆர் பெயர் வைத்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம். எனவே இனிமேல் சென்ட்ரல் ரயில் நிலையம் எம்ஜிஆர் ரயில் நிலையம் என்று அழைக்கப்படும் என்பதால் அதிமுகவினர்களின் நீண்டநாள் கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது
 
இந்த நிலையில் சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் முனையத்திற்கு மறைந்த தமிழக முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் பெயரை சூட்டி பெருமை படுத்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
 
இதுபோல் சென்னை எழும்பூர் ரயில் முனையத்திற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழ அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பெயரை சூட்டிட வேண்டுமென எனது அன்புக்கோரிகையை தங்களிடம் வேண்டுகோளாக வைக்க கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். 
 
திமுகவினர் கூட யாரும் வைக்காத இந்த கோரிக்கையை திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி விடுத்திருப்பது திமுக தொண்டர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது