வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2015 (07:50 IST)

கருணாநிதியிடம் மன்னிப்பு கோரினார் டி.கே.எஸ். இளங்கோவன்

திமுக தலைவர் கருணாநிதியிடம் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மனுகொடுத்து மன்னிப்பு கோரினார்.
 
அந்த மனுவில் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பதாவது:-
 
என்னை ஆளாக்கிய அன்பு தலைவருக்கு வணக்கம். தங்கள் மன்னிப்பைக்கோரி இந்த கடிதம் எழுதுகிறேன். பல நேரங்களில் வார்த்தைகளிலும் கட்டுப்பாடு தேவை என்பதை தாங்களே எனக்கு அறிவுறுத்தி உள்ள போதிலும், பக்குவமின்றி நான் ஊடகத்தில் தெரிவித்த வரம்பு மீறிய கருத்துக்கள் தங்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
 
அவ்வாறு நடந்து கொண்ட நான் குற்றத்தை உணர்ந்து தங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் திமுக வை பற்றி தவறாக பேசுவது கேட்டு என் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த கோபத்தின் வெளிப்பாடாக எனது பேட்டி அமைந்துவிட்டது.
 
தலைமை கழகத்தில் பணியாற்றுவோர் தலைவருக்கு எந்த வகையிலும் சிக்கல் ஏற்படுத்துபவர்களாக இருந்து விடக் கூடாது. நான் அதனை மீறித் தவறிழைத்து விட்டேன்.
 
இனி ஒரு முறை அத்தகைய தவறை செய்ய மாட்டேன் எனத் தங்கள் தாள் பணிந்து உறுதி கூறுகிறேன். தயைகூர்ந்து தாங்கள் என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
 
டி.கே.எஸ். இளங்கோவன், திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து, இந்த மனுவை கொடுத்தார்.
 
சில தினங்களுக்கு முன்னர், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும் என்றுடி.கே.எஸ். இளங்கோவன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.