1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 3 நவம்பர் 2014 (15:42 IST)

பால் விலை உயர்வுக்கு எந்த அரசைக் கண்டிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன் - கருணாநிதி

இன்றைக்கு இங்கே இருக்கின்ற அரசு ஜெயலலிதா அரசா? அல்லது பன்னீர்செல்வம் அரசா? என்று தெரியாத சூழ்நிலையில் எந்த அரசைக் கண்டிப்பது என்று தெரியாமல் நானும் விழித்துக் கொண்டிருக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
பால், மின் விலை உயர்வை கண்டித்து சென்னை, சேப்பாக்கத்தில் திமுக சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் கருணாநிதி பேசியபோது, இன்றைக்கு யாரை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்றால். நம்மால் பதில் சொல்ல முடியாது. இன்றைக்கு இங்கே இருக்கின்ற அரசு ஜெயலலிதா அரசா? அல்லது பன்னீர்செல்வம் அரசா? என்று தெரியாத சூழ்நிலையில் எந்த அரசைக் கண்டிப்பது என்று தெரியாமல் நானும் விழித்துக் கொண்டிருக்கிறேன். 
 
தமிழ்நாட்டு மக்கள் யாரைப்பார்த்து, யாரைக் கண்டித்து, எங்களுக்கு வழி காட்டுங்கள் என்று கேட்பதென்றால் ஆளுகிற பொறுப்பிலே யாரும் இல்லை. இருந்தவர்கள் எல்லாம் மொட்டை போட்டுக் கொண்டோ, தாடி வளர்த்துக் கொண்டோ, அடையாளம் தெரியாமல் இன்றைக்கு காட்சி தருகிறார்கள். சட்டம்– ஒழுங்கு, அமைதி இதைப் பற்றிய பிரச்சினைகளைப் பற்றி ஆட்சியிலே இருப்போர் கவலைப்படுவதில்லை என்று பேசினார்.