Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வராதவருக்கு எதுக்கு வைர விழா?? ஸ்டாலினுக்கு நெருக்கடி


sivalingam| Last Modified வெள்ளி, 19 மே 2017 (23:25 IST)
தலைவர் கருணாநிதி சட்டமன்றத்திற்கு தேர்வு பெற்று 60 ஆண்டுகள் ஆவதை அடுத்து வரும் ஜூன் 3ஆம் தேதி வைரவிழா நடத்த திமுக சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திமுகவின் செயல் தலைவர் மு.கஸ்டாலின் செய்து வந்தார். இந்த விழாவில் ஏழு மாநில முதல்வர்கள், ராகுல்காந்தி உள்பட பல தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள இருந்தனர்
 இந்த நிலையில் இந்த விழாவில் கருணாநிதி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், 'மருத்துவர்களின் ஆலோசனையின்படி கருணாநிதி இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று கூறினார்.

கருணாநிதிக்கு வைரவிழா எடுக்கும் நிலையில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வராதவருக்கு எதுக்கு வைரவிழா என்றும் கட்சிக்குள்ளேயே குரல் எழும்பியுள்ளதால் ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, 'திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் நடத்தப்படும் வைர விழா அரசியல் ஆதாயத்துக்கானது' என்று கடுமையாக சாடியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :