Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ.வின் மரணத்தில் நடராஜனுக்கு தொடர்பு உண்டு - கராத்தே ஹுசைனி


Murugan| Last Updated: புதன், 28 டிசம்பர் 2016 (18:11 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என கராத்தே ஹுசைனி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
மறைந்த தமிழக முதல்வர் ஜெ.வின் கடந்த கால ஆட்சியில் தன்னை அதிமுக-வின் அபிமானியாக காட்டிக் கொண்டவர் கராத்தே ஹுசைனி. தனது ரத்தத்தினால் ஜெ.வின் உருவ படம் வரைந்து அவரிடம் கொடுத்தவர். அதேபோல், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா சிறையில் இருந்த போது, தன்னை சிலுவையில் அறைந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.
 
இந்நிலையில் அவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. அவரது மரணத்தில் கண்டிப்பாக மர்மம் அடங்கியுள்ளது. அவரை திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். இதற்கு பின்னால் சசிகலாவின் கணவர் நடராஜன் இருக்கிறார். எனவே ஜெ.வின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
 
இரண்டு முறை ஓ.பி.எஸ் மீது நம்பிக்கை வைத்து அவரை முதல் அமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா. எனவே அவர், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
இவரின் பேட்டி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :