வைகோ மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

வைகோ மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்


K.N.Vadivel| Last Updated: வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (04:33 IST)
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
 
வஉசி இளைஞர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கனகவேல், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், மூத்த அரசியல் வாதியும், இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவருமான கருணாநிதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மிகவும் அவதூறாக பேசியுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 


இதில் மேலும் படிக்கவும் :