Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புரட்சி செய்யும் நிலைக்கு மக்களை ஆளாக்காதீர்கள் - சசிகலாவை எச்சரித்த கமல்ஹாசன் (வீடியோ)


Murugan| Last Updated: வியாழன், 9 பிப்ரவரி 2017 (11:04 IST)
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து நடிகர் கமல்ஹாசன் காட்டமாக கொடுத்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

 

 
நடிகர் கமல் சமீபகாலமாக, சமூகத்தில் நிகழும் முக்கிய நிகழ்வுகளுக்கு தன்னுடைய கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர்கள் தாக்கப்பட்டபோது கண்டனம் தெரிவித்தார்.
 
நந்தினி என்கிற இளம் சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட போதும், அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்தும் அவர் பேசி உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பு, தன்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி, ராஜினாமா கடிதத்தை வாங்கிக் கொண்டதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கொடுத்த பேட்டியை அடுத்து, தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பை எட்டியிருக்கிறது.
 
சசிகலா தரப்பிற்கும், ஓ.பி.எஸ் தரப்பிற்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. எனவே, அதிகாரப்பூர்வமான முதலமைச்சர் இல்லாத காரணத்தினால், அரசு எந்திரம் முடங்கி போயுள்ளது.
 
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஓ.பி.எஸ்-ஸிற்கு தனது ஆதரவை அளித்துள்ளார். வட இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் அவரே முதல்வராக அமர வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
“எனக்கோ, என் ரசிர்களுக்கோ அரசியல் ஆசை கிடையாது. இது, அன்பையும், அமைதியையும், அஹிம்சையும் போதித்த நாடு. எனவே, மக்களை புரட்சி செய்யும் நிலைக்கு ஆளாக்காதீர்கள். அவர்கள் (சசிகலா தரப்பு) அதை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், விளைவு விபரீதமாக அமையும்” என அவர் எச்சரித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :