தினகரனை குறி வைக்கும் கமல்ஹாசன் - நிர்வாகிகளுக்கு கமல் அதிரடி உத்தரவு

Last Updated: திங்கள், 5 மார்ச் 2018 (15:52 IST)
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனின் ஊழலை அம்பலப்படுத்துமாறு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் மய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
அரசியல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நடிகர் கமல்ஹாசன் அதிமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார். அந்நிலையில்தான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதனால், பொதுமக்கள் மத்தியில் அவரின் இமேஜ் உயர்ந்தது. ஆனால், ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து, தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா செய்தது என செய்திகள் பரவியது. ஆனால், தினரன் அதை மறுத்தார். 
 
அதேபோல், திருடனிடம் பிச்சை எடுப்பது வெட்கக் கேடானது என பகீரங்கமாக விமர்சித்தார். இது தொடர்பாக, கமல்ஹாசன்  மீது தினகரன் தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது.

 
மேலும், சசிகலா குடும்பம் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்து வருகிறது என கருதும் கமல்ஹாசன்,  ஜெ.வின் மரணத்தின் பின் அவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகிறார். பணம் கொடுத்து தேர்தலில் சந்திப்பதை விரும்பாத கமல்ஹாசன், டிடிவி தினகரனின் ஊழலை மக்களிடையே அம்பலப்படுத்தி அவரின் இமேஜை உடைக்க வேண்டும் என மய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :