Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நிச்சயம் அரசியலுக்கு வருவேன்; எச்சரித்த கமல்ஹாசன்


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 30 ஜூலை 2017 (14:17 IST)
நான் அரசியலுக்கு வருவது எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை பொறுத்து அமையும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

 
கமல்ஹாசன் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசு ஊழலில் நிரம்பி வழிக்கிறது என்றார். அதைத்தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மற்றும் தமிழக முதல்வர் அவரை விமர்சித்தனர். இதில் ஆத்திரமடைந்த கமல் டுவிட்டரில் கொதித்து எழுந்தார். ஊழல் குறித்த தகவல்களை தமிழக மக்கள் டிஜிட்டல் முறையில் பதிவிட கேட்டுக்கொண்டார். ஹெச் ராஜா பேசியதற்கு தக்க பதிலடி கொடுத்தார்.
 
இதனிடையே கமல்ஹாசன் கட்டாயம் அரசியலுக்கு வர போகிறார் என்று பலரும் வதந்திகளை பரப்பி வந்தனர். இதனால் அதிமுக அமைச்சர்கள் கமல் அரசியலுக்கு வந்தால் என்று அச்சத்தில் பல விதமான கருத்துகளை தெரிவித்தனர்.
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கமல்ஹாசன் கூறியதாவது:-  
 
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இனிமேல் நாம் தேட வேண்டியது தலைவர்களை அல்ல நிர்வாகிகளை. அரசியலுக்கும் வந்து பார்த்துவிடுவோம் என்ற எண்ணத்துக்கு இன்னும் நான் வரவில்லை. அது நடைமுறைகளையும், சூழலையும், எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தையும் பொறுத்தது என்றார்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :