செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 22 ஜூலை 2017 (10:10 IST)

கமல் பார்ப்பன சாதியில் பிறந்தவர் அவரால் யாரையும் திருத்த முடியாது: அண்ணன் சாருஹாசன் அதிரடி!

கடந்த சில தினங்களாக தமிழக அரசியல் களத்தில் நடிகர் கமல்ஹாசனின் பற்றிய பேச்சு தான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. கமலின் கருத்துக்களும் அதற்கு அமைச்சர்களின் விமர்சனங்களும். அதற்கான கமலின் அதிரடியான பதிலடிகளும் அரசியலை சூடுபிடிக்க வைத்துள்ளது.


 
 
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரோ என்ற விவாதம் எழுந்துள்ளது. இதனையடுத்து கமல் அரசியலுக்கு வர தகுதியற்றவர் எனவும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து கமலின் சகோதரரான சாருஹாசன் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
 
ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவின் பேரில் ஆட்சி செய்கிறீர்கள், சிறைக்கு சென்றுள்ள சசிகலாவின் பேரில் ஆட்சி செய்கிறீர்கள் என அமைச்சர்களை விளாசினார். இந்நிலையில் மீண்டும் தனது பேஸ்புக் பதிவில் கமல் அரசியலுக்கு வர வேண்டும் என கூறியுள்ள சாருஹசன், அவரால் யாரையும் திருத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


 
 
இது தொடர்பாக சாருஹாசன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது, கமலஹாசன் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு நல்லதுதான். ஆனால் அவர் வந்து யாரையும் திருத்த முடியாது. தமிழ் மக்கள் ஒரு பெரியாரின் நேர்மையை ஒப்புக் கொள்ளாதவர்கள். 1952 ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு சென்னை இராஜதானியில் அறுதி பெரும்பான்மை இல்லாமல் போனது.
 
அன்று பெரியார் தலையிட்டு அவர் சொன்ன கொள்கைகளை ஒப்புக் கொள்ளும் காமன்வீல் பார்டி தலவர் மாணிக்கவேல் நாயக்கரையும் பமகவின் அன்றைய தலைவர் பழனிச்சாமி கவுண்டரையும் அமைசரவையில் சேர்த்துக் கொண்டு இராஜாஜி அவர்களை முதல்வராக ஒப்புக்கொண்டால் 14 அல்லது 15 உறுப்பினர்களை காங்கிரசுக்கு வாக்களிக்க செய்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவி செய்தார்.
 
பின்னால் பெரியார் யோசனைப்படி இந்த இரு கட்சிக்கரர்களையும் காங்கிரசில் இணைய செய்தார். அன்று அண்ணா பெரியாரிடமிருந்து பிரிந்து திமுகவை 1949 ஆண்டு ஆரம்பித்தவர். 1952 தேர்தலில் திமுக போட்டியிடவே இல்லை. 1957 தேர்தலில்15 உறுப்பினருடன் ஆரம்பித்த திமுக 62 இல் ஐம்பதாகி 67 இல் எம்ஜீஆர் சுடப்பட்டதின் எதிர் விளைவாக ஆட்சிக்கு வந்தது. கமல ஹாசன் ஒரு பார்ப்பன சாதியில் பிறந்தவர் என்பதை திராவிட தமிழன் தான் சாகும் வரை மறக்க மாட்டான் என குறிப்பிட்டுள்ளார்.