வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Updated : சனி, 30 ஏப்ரல் 2016 (13:19 IST)

வாக்காளர் பட்டியலில் பெயர்: பொய் கூறுகிறாரா கமல்ஹாசன்?

நேற்று நடைபெற்ற சபாஷ் நாயுடு துவக்கவிழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கடந்த தேர்தலில் எனக்கு ஓட்டு இல்லை என்று மறுக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலிலேயே என் பெயர் இல்லை என்று சொல்லி விட்டார்கள். இதனால் நான் ஏமாற்றம் அடைந்தேன். ஆனாலும் ஓட்டு உரிமை கேட்டு மனு செய்வது எனது ஜனநாயக கடமை.


 

ஆனால் இந்த சட்டமன்றத் தேர்தலில் நான் வாக்களிக்க முடியாது என்றும் சொல்லலாம். வாக்களிக்க மாட்டேன் என்றும் சொல்லலாம். காரணம் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல நேரலாம். எப்போது வெளிநாடு செல்வேன் என்று தெரியாது என்று கூறினார். கமல்ஹாசனின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பாடுபட்டுவரும் நிலையில் இவரே இவ்வாறு கூறுகிறாரே என்று சமூக வலைதளங்களில் தங்களது கருத்தை பகிர்ந்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியபோது, வாக்காளர் பட்டியலில் (வீட்டு எண் : 4/ 172 ) கமல்ஹாசன் புகைப்படம் ஒட்டப்பட்ட வரிசைப் பட்டியலை தேர்தல் ஆணையர் வெளியிட்டார். மேலும் உங்கள் வாக்கை பதிவு செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருங்கள் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கமல்ஹாசன் வாக்காலர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பொய் கூறியுள்ளார் என்றும், ஓட்டு போட விருப்பம் இல்லை என்றால் போடவேண்டாம் .ஆனால் அதைவிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று பொய் சொல்லுவதை தவிர்க்கவும் என்று சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.