Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காஸ்ட்ரோவுக்கு கமல்ஹாசன் புகழாரம் - ’அவரைப் போல் அநேக வீரர்கள்’


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:26 IST)
மக்களின் போர்வீரனாகவும், அரசியல் தலைவராகவும் வாழ்ந்து மறைந்த பிடல் காஸ்ட்ரோவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து கூறியுள்ள கமல்ஹாசன், "21-ம் நூற்றாண்டில் மேற்கத்திய உலகத்தை முதலாளித்துவத்திலிருந்து மக்கள் ஜனநாயகத்திற்கு மாற்றுவதற்கான ஆதார மையமாக விளங்கினார் காஸ்ட்ரோ. தமக்கு எதிராக நடத்திய அறுநூறுக்கு மேலான கொலை முயற்சிகளிலிருந்து அவர் உயிர் தப்பினார்.

பொலிவியாவில் சே குவேராவைக் கொன்றதுபோல் கியூபாவிலும் அப்படியொரு சம்பவத்தை நிகழ்த்த சிஐஏ திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்த முயற்சியில் தோல்வியுற்றதால் சிஐஏ அதைக் கைவிடவேண்டி வந்தது. இறுதியாக, ஃபிடல் காஸ்ட்ரோ தனது ஜீவனை இயற்கையிடமே ஒப்படைத்துவிட்டார். அவரைப் போல் அநேக போர்வீரர்கள் உருவாகி வருவார்கள்.

அவர்கள் உலகின் பல நாடுகளிலும் உத்வேகத்துடன் அணிவகுத்து வருகிறார்கள். உலக முதலாளித்துவம் அதிக அநீதிகள் நிறைந்ததாக ஆகும்போது இத்தகைய போராளிகள் அதிகமாக உருவாகி வருவார்கள்" என்றார்.

 


இதில் மேலும் படிக்கவும் :