வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (14:17 IST)

’நா. முத்துக்குமார் மீது கோபம்’ - கமல் ஹாஸன்

’நா. முத்துக்குமார் மீது கோபம்’ - கமல் ஹாஸன்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார்(41) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.


 
இது குறித்து கமல் ஹாஸன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை ந.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம்பேணாத் தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்கு நன்றி” என்றார்.

மேலும், நா. முத்துக்குமாரின் மரண செய்தி அறிந்த, பல திரையுலக பிரபலங்கள் தங்களின் அதிர்ச்சியையும், இரங்கலயும்  நேரில் சென்று வெளிப்படுத்தி வருகின்றனர்.

நா. முத்துக்குமார் இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.