1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (19:49 IST)

மூட நம்பிக்கைகளை ஒழிக்க நான் அரசியலுக்கு வரவில்லை: கமல்ஹாசன்

கமல்ஹாசன் தன்னை அடிக்கடி பொது மேடைகளில் பகுத்தறிவாதி என்று கூறிக்கொள்வார். அதே நேரத்தில் தன்னுடைய குடும்பத்தில் தனது மகள் உள்பட பலர் பகுத்தறிவாளராக இல்லை என்றும் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் தான் தலையிடுவது இல்லை என்றும் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் கமல் ஒரு போலி பகுத்தறிவாளர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறினார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், 'தான் ஒரு போலி பகுத்தறிவாளர் என்று கூற தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அரசியலுக்கு தான் வந்திருப்பது ஏழ்மையையும் ஊழலையும் ஒழிக்கவே தவிர மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பகுத்தறிவாளர் என்று நீங்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் உங்களை ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் என்று உங்கள் ரசிகர்களும் தொண்டர்களும் கூறுகின்றார்களே, இது சர்ச்சை இல்லையா? என்ற கேள்விக்கு நிச்சயம் சர்ச்சைதான், என்னுடைய தொண்டர்களை திருத்தி கொள்ள அறிவுரை கூறுவேன் என்று கூறினார்.
 
மேலும் லோக்பால் குறித்து கமல் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் லோக்பாலில் பாலே இல்லை வெறும் தண்ணீர்தான் உள்ளது என்று கேலியாக குறிப்பிட்டார்