1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 25 நவம்பர் 2015 (05:20 IST)

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராக காதர்மொய்தீன் மீண்டும் தேர்வு

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராக காதர்மொய்தீன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
 

 
திருச்சியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி ரோஷன் மஹாலில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக காதர் மொய்தீன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், பொதுச் செயலாளராக முஹம்மது அபூபக்கர் மற்றும் பொருளாளராக ஷாஜகான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து, செய்தியாளர்களிடம் காதர்மொய்தீன் கூறுகையில்,  தமிழகத்தில், மழை வெள்ளம் காரணமாக பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
 
முதல்வர் ஜெயலலிதா தனது கட்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். ஆனால், அவர் தமிழகத்தை கட்டுப்பாடாக வைக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், வரும் 2016 சட்ட மன்ற தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். நாங்கள், திமுக கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்றார்.