Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அடங்கு; இல்லையெனில் அடக்கிவிடுவோம்: தினகரனுக்கு எச்சரிக்கை விடுத்த ஓபிஎஸ் அணி


bala| Last Updated: புதன், 15 மார்ச் 2017 (14:41 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில்  சிகிச்சை பெற்றபோது தான் அவரை  நேரில் சந்தித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் தினகரன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறினார்.  இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டியில் செப்டம்பர் 25ம் தேதி ஜெயலலிதாவை நேரில் சந்தித்தேன் என்று கூறி இருந்தார்.  செப்டம்பர் 25-ல் ஜெயலலிதா உடல்நல குறைவால் யாரும் பார்க்கமுடியாத நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த போது பார்த்தேன் என்று எப்படி சொல்கிறார்?. இதற்கு அப்பல்லோ நிர்வாகம்தான் பதில் சொல்லவேண்டும்.

அதிமுகவிற்காக தினகரன் என்ன தியாகம் செய்து இருக்கிறார்? அவருக்கு நாங்கள் வேண்டுகோள் ஒன்றை வைக்கிறோம். தயவுசெய்து உண்மைக்கு மாறான கருத்துகளை  நீங்கள் சொல்லி வந்தால், உங்களை பற்றி பல்வேறு கருத்துகளை சொல்ல வேண்டியது வரும். உங்களுக்கும், கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மறைந்த பின்பு உங்கள் சித்தியின் உதவியுடன் துணை பொதுச்செயலாளர் என்று ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்.

நீங்கள் அடக்கிப்பேச கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி அடக்கிப்பேசவில்லை என்று சொன்னால் நாங்கள் உங்களை அடக்கிவிடுவோம் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :