கண்ணீர் விட்டு.. கட்டிப்பிடித்து... நடித்து.. காரியம் சாதிக்கும் ஜூலி...?


Murugan| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (14:12 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள ஜூலி நடித்தே காரியம் சாதிக்கிறார் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகிறது.

 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே ஜூலி நிறைய விஷயங்களில் நடிக்கிறார் எனக் கூறப்பட்டது. தொடக்கத்தில் ரொம்ப அலட்டிக்கொண்டார்.  செயற்கையாக நடந்து கொண்டார். அதனால் அவரை பலருக்கும் பிடிக்காமல் போனது.
 
ஆனால், ஆர்த்தி முதல் காயத்திரி வரை அவரை வெறுப்பேற்றியபோது, அழுது வடிந்து ஒப்பாரி வைத்தார். இதனால், அவர் மீது மக்களுக்கு அனுதாபம் பிறந்தது. அதேபோல், காயத்ரி மற்றும் ஆர்த்தி மீது ஆத்திரம் ஏற்பட்டது. மேலும், தொடக்கத்தில் பரணியை அண்ணன் என அழைத்தார். அதன் பின் எல்லோருடனும் சேர்ந்து கொண்டு ‘அவர் இங்கிருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்றார். 
 
அதாவது, எலிமினேசன் லிஸ்டில் யாராவது வந்து விட்டால், அவர்களுடன் நெருங்கி பழகுவதை நிறுத்திக்கொண்டார். பரணி அப்போது லிஸ்டில் இருந்தார். எனவே அப்படி நடித்தார். 


 

 
மேலும், நேற்று அவரும் வெளியேறலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்ட போது, பயங்கரமாக அழுதார்..மேலும், அனைவரையும் அநியாயத்திற்கு கட்டிப்பிடித்து, இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களை கடுப்பேற்றினார். 
 
இருந்தாலும், அவர் மீதுள்ள அனுதாபத்தால் அவருக்கு அதிக மக்கள் வாக்களித்து அவரை காப்பாற்றியுள்ளனர். அவர் தனது போட்டியாளராக நினைத்த ஆர்த்தி வெளியேறிவிட்டார். ஆர்த்தி வெளியேறும் போது அவரை கட்டிப்பிடிக்க ஆர்த்தி முயன்றார். அதற்கு ஆர்த்தி “இப்போதாது நடிக்காமல் இரு” என ஓபனாகவே பேசினார். அதற்கு ஜூலி சிரித்துக் கொண்டே நின்றார்.
 
பிக்பாஸில் இன்னும் என்னென்ன காட்சிகள் அரங்கேறப்போகிறது, அடுத்து யார் வெளியேறப்போகிறார் என இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் பலர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்...

webdunia

இதில் மேலும் படிக்கவும் :