வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 8 ஜூலை 2017 (05:56 IST)

என் கருத்தை எதிர்த்து போராடியது யார்? நீதிபதி கிருபாகரன் ஆவேச கேள்வி

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 42 மாணவ்ர்களை தேர்வில் தோல்வி அடைய செய்ததுக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. 



 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ஆசிரியர் சங்க அங்கீகாரத்தை ஏன் ரத்துசெய்யக்கூடாது என்பது உள்ளிட்ட 20 கேள்விகளை சமீபத்தில் எழுப்பியதோடு, இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.
 
நீதிபதி கிருபாகரனின் இந்த கருத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அதிருப்தி அடைய செய்ததால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தனர்.
 
இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'எனது கருத்தை எதிர்த்துப் போராட்டம் அறிவித்தது யார்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, 365 நாள் பள்ளி செயல்படும். 160 நாள்கூட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பணிக்குச் செல்வதில்லை. பணிக்குச் செல்லாமல் முறைகேடுசெய்வோர், ஆசிரியர் சங்கத்தைப் பயன்படுத்துகின்றனர். ஃபெயிலாக்கப்படுதை எதிர்த்து நீதிமன்றம் வருவோர், பிள்ளைகளின் நலனில் அக்கறைசெலுத்த வேண்டும்"