வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:08 IST)

மோடி எதிர்ப்பால் இணையத்தளத்தில் ஆபாச தாக்குதல்: ஜோதிமணி புகார்

செல்லாத நோட்டுகள் அறிவிப்பை எதிர்த்து கருத்துப்பதவு செய்ததை அடுத்து சமூக வலைத்தளத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.


 

செல்லாமல் ஆக்கப்பட்ட 500 மற்றும் 1,000 நோட்டுகள் பிரச்சனை 50 நாளில் முடிவுக்கு வரும் என்று அறிவித்த பிரதமர் மோதியின் வாக்குறுதி செயல்பாட்டிற்கு வரவில்லை என்று ஜோதிமணி பதிவிட்டார்.

அதன் பிறகு, ஜோதிமணிக்கு எதிராக சிலர் ஒன்றிணைந்து ஆபாச வாட்ஸ் அப் குழு ஒன்றைத் தொடங்கி, அவர் குறித்த வக்கிரக் கருத்துகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அதில், ஜோதிமணியைக் குறித்து படு ஆபாசமாக சில பாஜகவினர் பதிவிட்டிருந்தனர்.

அதற்கு எதிராக சமூக வலைத்தளமான முகநூலில் பிரதமர் நரேந்திர மோடி, பிஜேபியின் தலைவர் அமித் ஷா, தமிழக பிஜேபியின் தலைவர் சகோதரி தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோருக்கு ஒரு திறந்த அறிக்கை ஒன்றினை ஜோதிமணி வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தன்னை மிகவும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியவர்கள், பாலியல் ரீதியாக கருத்துக்களை பதிவிட்ட வாட்ஸ் ஆப் குழுவை தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சைபர் குற்ற தடுப்பு பிரிவிடம் ஒரு புகாரை அவர் அளித்துள்ளார்.