வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (11:39 IST)

சொத்துக் குவிப்பு வழக்கில் குன்ஹா வழங்கிய தீர்ப்பு

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 4 பேருக்கும் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. குற்றவாளிகள் 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் வித்தித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு செப்டபர் 27ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்  நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை பார்க்கலாம்.

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார். வழக்கில் தொடர்புடைய சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இவர்கள் 3 பேருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார். உடனடியாக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் அவர்களை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா.

தற்போது குன்ஹாவின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.