Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா செப்டம்பர் மாதமே இறந்து எம்பாமிங் செய்யப்பட்டார்: அதிர்ச்சி தகவலை கூறும் தோழி!

ஜெயலலிதா செப்டம்பர் மாதமே இறந்து எம்பாமிங் செய்யப்பட்டார்: அதிர்ச்சி தகவலை கூறும் தோழி!


Caston| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (15:18 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி மரணமடைந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இதனையடுத்து இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கேள்விகளை தொடுத்தனர்.

 
 
ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் டிசம்பர் 5-ஆம் தேதி அவர் மரணமடைந்தார் என கூறப்பட்டது வரை அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை மருத்துவமனையும், சசிகலா தரப்பும்.
 
ஆளுநர், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் மரணமடைந்ததால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் வருகின்றன. மேலும் இறந்த ஜெயலலிதாவின் கன்னத்தில் அவரது உடலை பதப்படுத்தும் எம்பாமிங் செய்யப்பட்டதற்கான துளைகள் உள்ளன.
 
இது ஜெயலலிதா எப்பொழுது இறந்தார், முன்னரே இறந்துவிட்டாரா என்ற சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது நெருங்கிய தோழி கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய கீதா, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் மாதமே இறந்து விட்டார் எனவும் எம்பாமிங் அப்போதே செய்துவிட்டனர் எனவும் கூறினார். இதனை மறைக்க சசிகலாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையும் உடந்தையாக இருந்துள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :