Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எடப்பாடி பழனிச்சாமியை அடிமையாக நடத்திய ஜெயலலிதா: ராமதாஸ் பொளேர்!

எடப்பாடி பழனிச்சாமியை அடிமையாக நடத்திய ஜெயலலிதா: ராமதாஸ் பொளேர்!


Caston| Last Updated: செவ்வாய், 20 ஜூன் 2017 (14:36 IST)
தற்போது தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிமையாகவே நடத்தியதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் தற்போதும் அடிமை கலாச்சாரம் தொடர்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்ற அமைச்சர்கள் அறிவிக்க வேண்டிய அறிவிப்புகளை தானே 110 விதியின் கீழ் வெளியிட்டு அவர்களை அடிமையாக நடத்துகிறார் என ராமதாஸ் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
 
ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அனைத்து அறிவிப்புகளும் தம்மால் தான் வெளியிடப்பட வேண்டும் என்ற ஆணவத்துடன், அனைத்து அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
 
இப்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் அடிமையாக நடத்திய ஜெயலலிதா, அவர்கள் வெளியிட வேண்டிய அனைத்து அறிவிப்புகளையும் அவரே வெளியிட்டு வந்தார். கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மட்டும் 110 விதியின் கீழ் 181 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார் என கூறிய ராமதாஸ் இதனை எடப்பாடி பழனிச்சாமியும் பின்பற்றி அமைச்சர்களை அடிமைகளாக நடத்துகிறார் என்றார்.
 


இதில் மேலும் படிக்கவும் :