வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 17 அக்டோபர் 2014 (15:06 IST)

66 வயதான ஜெயலலிதாவுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்!

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கு ஜெயலலிதாவின் உடல்நிலையே முக்கிய காரணமாய் விளங்குகிறது. 
 
66 வயதான ஜெயலலிதாவுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உபாதைகள் உள்ளன என ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பாலி நாரிமன் (Fali Nariman), உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
 
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வன்முறைகளிலும் அவதூறுகளிலும் ஈடுபடக் கூடாது எனக் கட்சித் தொண்டர்களுக்கு ஜெயலலிதா அறிவுறுத்த வேண்டும் என்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், ஜாமீன் மனுவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்றும் எச்சரித்தனர்.
 
இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே அவருக்கு டிசம்பர் 18 வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான அடுத்த விசாரணை, டிசம்பர் 18 அன்று நடைபெற உள்ளது.
 
உச்சநீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, உடல்நிலையைக் காரணம் காட்டியே ஜாமீன் வழங்கியுள்ளதை உறுதிப்படுத்தினார்.