1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 7 மே 2016 (19:56 IST)

நான்கு சுவர்களுக்குள் இருக்கிறார் ஜெயலலிதா: மதுரையில் ரகுல் காந்தி ஆவேசம்

திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து இன்று தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி மதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.


 
 
மதுரையில் பேசிய ராகுல் காந்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா யாரையும் சந்திக்காமல் தொடர்புகொள்ள முடியாத ஒரு முதலமைச்சராக இருக்கிறார். இவரை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஜெயலலிதா நான்கு சுவர்களுக்கு மத்தியில் யாரும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்.
 
டெல்லியில் இருந்து என்னால் தமிழகத்திற்கு வர முடிகிறது. ஆனால் இங்குள்ள மக்கள் பாதிக்கப்படும் போது, இந்த முதலமைச்சரால் மக்களை சந்திக்க முடியாதது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
 
மேலும், ஜெயலலிதா கொடுத்த மிக்ஸி ஓடவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் இருந்து வெளியேறிய தொழிற்சாலைகள் இங்கு வரும். தமிழர்கள் வெளிமாநிலத்திற்கு செல்ல வேண்டியதில்லை என்றார்.
 
முன்னதாக, பெரியார், காமராஜர், எம்ஜிஆர், கலைஞர் போன்ற தலைவர்கள் மக்களிடம் சென்றார்கள். மக்கள் மத்தியில் வாழ்ந்தார்கள். அதேப்போல் ஸ்டாலினிடமும் அந்த நல்ல குணங்கள் இருக்கிறது என்றார் ராகுல் காந்தி.