கோபத்தில் இருக்கும் ஜெயலலிதா ஆவி; 2023-இல் மறுபடியும் பிறப்பார்: ஜோதிடர் ஆரூடம்!

கோபத்தில் இருக்கும் ஜெயலலிதா ஆவி; 2023-இல் மறுபடியும் பிறப்பார்: ஜோதிடர் ஆரூடம்!


Caston| Last Updated: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:25 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இறந்தார். அவரது உடல் 6-ஆம் தேதி மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது ஆவி கோபமாக உள்ளதாக ஜோதிடர் அசோக்ஜி கூறியுள்ளார்.

 
 
பழனியை பூர்வீகமாக கொண்ட பிரபல ஜோதிடர் அசோக்ஜி கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெரும் எனக்கூறினார். அதே போல அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையாகி வருவார் என கூறினார். மேலும் சென்னையில் வெள்ளம் வரும் எனவும் கூறினார்.
 
தற்போது ஜெயலலிதாவின் ஆவி சாந்தி அடையவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்து மத தர்மப்படி எந்த ஒரு ஆத்மாவும் 3 நாள் கழித்துதான் கர்மாவை சேரும் என்பது விதி. ஜெயலலிதாவின் ஆன்மா திருப்தியற்ற நிலையில் இருப்பதால் அவரது உடலை விட்டு இன்னும் முழுமையாக வெளியேறவில்லை.
 
இந்து மத ஆகம விதிப்படி ஜெயலலிதாவின் குடும்பத்தில் சடங்குகள் செய்யாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அவரது ஆவி அதிதீவிர ஆத்திரத்தோடு இருக்கிறது. ஜெயலலிதா விரும்பிய வீடு, ஆசைப்பட்டு அணிந்த ஆடைகள், பொருட்கள் இவைகளை யார் பயன்படுத்தினாலும் அவர்களுக்கு ஜெயலலிதா சரியான பாடத்தை, தண்டனையை வழங்குவார்.
 
மேலும் ஜெயலலிதா ஆவி பூலோகத்தில் 2023 வரை நிச்சயம் இருக்கும். ஜெயலலிதா ஆவி அடுத்த பிறவி எடுக்க இன்னும் 6 ஆண்டுகள் ஆகும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜோதிடர் அசோக்ஜி.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :