வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2017 (12:10 IST)

ஜெ.வின் போயஸ் கார்டன் இல்லம் சசிகலாவுக்காக சிறையாக மாறுகிறதா?

ஜெ.வின் போயஸ் கார்டன் இல்லம் சசி.க்கு சிறையாக மாறுகிறதா?

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவரை கர்நாடக சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


 
 
நேற்று டிடிவி தினகரன் முக்கிய வழக்கறிஞர்களுடன் பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சசிகலாவை பெங்களூரு சிறையிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வருவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு ஒரு கைதியை மாற்றுவது குறித்து சிறை நிர்வாகமே முடிவு எடுக்கலாம். ஆனால் சசிகலாவின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால் இது குறித்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க முடியும் என இந்த வழக்கில் கர்நாடக அரசு வழக்கறிஞராக ஆஜராகிய பி.வி.ஆச்சார்யா கூறியுள்ளார்.
 
ஆனால் இதனை வழக்கறிஞர் கண்ணதாசன் மறுக்கிறார் சசிகலா சிறை மாற்றம் குறித்து உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. தமிழக அரசும் கர்நாடக அரசும் முடிவு செய்தால் சசிகலாவை எங்கு வேண்டுமானாலும் சிறை மாற்றம் செய்யலாம். இதில் நீதிமன்றம் தலையிட வழியில்லை.
 
ஒரு குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்ட பிறகு அவர் மாநில அரசின் அதிகாரத்திற்கு கீழ் வந்துவிடுகிறார். எனவே சசிகலாவை தமிழகத்திற்கு கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இல்லை என்கிறார் அவர்.
 
இந்நிலையில் தமிழக அரசு ஜெயலலிதாவின் போய்ஸ் கார்டன் இல்லத்தை சசிகலாவுக்காக சிறையாக மாற்ற இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன. சிறைகள் சட்டம் 1894 உட்பிரிவு 3-ன் படி ஒரு மாநில அரசிற்கு எந்த இடத்தை வேண்டுமானாலும் சிறையாக மாற்றியமைக்கும் அதிகாரம் உண்டு என கூறுகிறார்கள்.
 
இதனை பயன்படுத்தி சசிகலாவிற்காக போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை சிறையாக மாற்ற அதிரடி நடவடிக்கைகளை எடப்பாடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன. சிறை அல்லாத இடத்தை சிலருக்காக சிறையாக மாற்றிய முன் உதாரணங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.