வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 6 பிப்ரவரி 2017 (15:13 IST)

ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது உண்மை தான்: ஒப்புக்கொண்டார் மருத்துவர்!

ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது உண்மை தான்: ஒப்புக்கொண்டார் மருத்துவர்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.


 
 
நாளுக்கு நாள் அவரது கால்கள் அகற்றப்பட்டன உள்ளிட்ட பல்வேறு வதந்திகள் வந்துகொண்டிருந்தன. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
 
இதில் செய்தியாளர்கள், ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்படதா? அப்படியென்றால் எப்பொழு பதப்படுத்தப்பட்டது, அதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகளை எழுப்பினர்.
 
அதற்கு பதில் அளித்த ஜெயலலிதாவின் உடலை எம்ஃபார்மிங் செய்த மருத்துவர் குழுவில் உள்ள பெண் மருத்துவர், ஜெயலலிதாவின் உடலை எம்ஃபார்மிங் செய்து பதப்படுத்தியது உண்மை தான்.
 
அவரது உடல் டிசம்பர் 5-ஆம் தேதி இரவு பதப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை 15 நிமிடங்களில் முடிக்கப்பட்டது. வழக்கமாக விவிஐபி யாராவது இறந்தால் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் எனவே அவரது உடல் கெட்டுப்போக வாய்ப்புள்ளது எனவே இதுபோன்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது தான்.
 
விவிஐபி மரணமடைந்தால் எம்ஃபார்மிங் செய்வது வழக்கமானது அதன் அடிப்படையிலேயே ஜெயலலிதாவின் உடலும் பதப்படுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உடலும் பதப்படுத்தப்பட்டது தான். அதனை செய்த அதே மருத்துவர்கள் குழுதான் மெட்ராஸ் மெடிக்கல் இன்ஸ்டியூட்டை சேர்ந்த மருத்துவர்கள் தான் ஜெயலலிதாவுக்கும் எம்ஃபார்மிங் செய்தனர் என மருத்துவர் விளக்கம் அளித்தார்.