ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : வெள்ளி, 7 அக்டோபர் 2016 (00:13 IST)

முதல்வர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டுமாம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 15வது நாளான இன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அவ்வறிக்கையில், கூறியிருப்பதாவது, ”முதல்வரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. நோய் எதிர்ப்பு மருந்து வழங்குதல் உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.” என்றனர்.
 
மேலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அப்பல்லோவிற்கு வந்துள்ளனர். முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களூடன் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். பின், எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்னானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். 
 
மேலு, இங்கிலாந்து மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பாலே இன்று மீண்டும் முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை செய்தார்.
 
முதல்வர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.