ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.5.5 கோடி


Abimukatheesh| Last Updated: திங்கள், 6 பிப்ரவரி 2017 (15:53 IST)
அப்பல்லோ மருத்துவமனை செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்று வருகிறது. இதில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.5.5 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஒட்டலில் ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்று வருகிறது.

இதில் அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் ரிச்சர் பீலே செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். குறிப்பாக ஜெயலலிதா கால்கள் வெட்டப்பட்டதா, உடல் எம்ஃபார்மிங் செய்யப்பட்டதா போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது.

இதில் மருத்துவ செலவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.5.5 கோடி என தெரிவிக்கப்பட்டது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :