Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ. மரணம் சசி. உறவினர் சிவகுமாரின் தவறால் தான் நடந்தது: பரபரப்பு தகவல்!

ஜெ. மரணம் சசி. உறவினர் சிவகுமாரின் தவறால் தான் நடந்தது: பரபரப்பு தகவல்!

புதன், 8 பிப்ரவரி 2017 (16:16 IST)

Widgets Magazine

எனது சிகிச்சை தொடர்ந்திருந்தால் இப்போது ஜெயலலிதா 100 சதவீதம் நலமோடு இருந்திருப்பார். சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரின் தவறான சிகிச்சையால் தான் ஜெயலலிதா மரணமடைந்தார் என ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.


 
 
டாக்டர் ஷங்கர் அக்குபங்சர் துறையில் பிரபலமானவர். இவர் கடந்த வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர். இவர் முன்னாள் ஆளுநர் ரோசைய்யா உள்ளிட்ட பல விஐபிகளுக்கு சிகிச்சை அளித்தவர்.
 
இவர் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பரபரப்பு தகவல்கள் சிலவற்றை கூறியுள்ளார். அதில், கடந்த வருடம் ஜூன் மாதம் ஜெயலலிதாவால் சிறிதும் நடக்க முடியாத நிலை வந்தது. அப்பொழுது நான் தான் அவருக்கு சிகிச்சை அளித்தேன்.
 
எனது சிகிச்சையின் பலனாக ஆகஸ்ட் மாதம் ஜெயலலிதாவால் வலியின்றி எளிதாக நடக்க முடிந்தது. ஆனால் திடீரென என்னை சிகிச்சை அளிக்க அழைக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்து வந்த சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார் என்னிடம் ஜெயலலிதா தற்போது நலமாக இருப்பதாகவே கூறிவிட்டார்.
 
ஜெயலலிதாவின் உடல் நிலை நல்லமுறையில் முன்னேற்றம் கண்டு வரும்போது அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தொடர்ந்து நானே சிகிச்சை அளித்திருந்தால் இப்போது ஜெயலலிதா 100 சதவீதம் நலமோடு இருந்திருப்பார் என டாக்டர் ஷங்கர் கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அதுவரை நான் சசிகலாவிடம் பேசியது இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

2012ஆம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை நான் சசிகலாவிடம் ...

news

சசிகலா செய்த பல தொழில்கள் ஜெ.விற்கே தெரியாது - ஓபிஎஸ் ஒபன் டாக்

அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் செய்து வந்த பல ...

news

வெளியேறிய எம்.எல்.ஏ-வை தேடி தூக்கி வந்த கட்சி தலைமை!!

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் தரப்பில் ...

news

ஜெ. விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா? ஆதாரத்தை வெளியிடும் இந்தியா டுடே: பி.எச்.பாண்டியன் பேட்டி

ஜெயலலிதா விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை இந்தியா டுடே ...

Widgets Magazine Widgets Magazine